ஸ்மார்ட் போன் அடிமைகளுக்காக ஆஃப்டைம் ஆப், அடங்கப்பா இப்படியும் ஒரு அப்ளிகேஷனா

By Meganathan
|

விலை குறைவாக ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிட்டா போதும், எந்நேரமும் அதையே பார்த்திட்டு இருக்கறது அப்படி அதுல என்ன தான் இருக்கு என்றே தெரியலை. ஸ்மார்ட் போன் பயன்படுத்துற பலரும் இப்படி தான் இருக்காங்கனே சொல்லலாம். அந்நதளவு ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிடுறவங்களுக்காகவே ப்ரெத்யேகமாக ஒரு ஆப் வந்திருக்கு இதை நீங்க கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.செம காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் போன் அடிமைகளுக்காக ஆஃப்டைம் ஆப்

ஹாம்பால்ட் பல்கலைகழகத்தின் ஆய்வில் பயனாளிகள் நாள் ஒன்றைக்கு 63 முறை தங்கள் ஸ்மார்ட் போனை அன்லாக் செய்வதாகவும் குறைந்தது 2 மணி நேரமாவது செல் போனுக்காக செலவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெர்மன் உளவியலாளர் அலெக்ஸான்டர் ஸ்டெயின்ஹார்ட் "ஆஃப்டைம்" (OFFTIME) என்ற அப்ளிகேஷனை உறுவாக்கியுள்ளார். இந்த ஆப் உங்க ஸ்மார்ட போனில் முக்கியமான விஷயங்களை தவற விடாமல் பார்த்து கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க கான்டாக்டில் இருக்கும் உங்க குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மெயில்களை தரவரிசை படுத்தும்.

மேலும் இந்த ஆப் உங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு தானாக பதில் அளிக்கும் என்பதோடு உங்க ஸ்மார்ட் போனில் நீங்க எந்த அப்ளிகேஷனை நீண்ட நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற தகவலையும் அளிக்கும். தற்சமயம் ஆஃப்டைம் ஆப் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்கின்றது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Offtime new App for Smartphone Addicts. This is a New Application available for Free in Google Play Store only for Android Users. OFFTIME App helps smartphone Addicts a lot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X