வடகொரியா என்ன செய்தாலும் 'வேஸ்ட்' தான் : அமெரிக்கா..!!

Written By:

தனக்கு இருக்கும் மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தோன்றியதையெல்லாம் செய்வதை சர்வதிகாரம் என்பார்கள். அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்குள் இருக்கும் நாடு தான் வடகொரியா.!

சமீப காலமாக தனது ஆயுத பலத்தை வெளிப்படையாக உலகிற்கு காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் வட கொரியாவின் உச்சக்கட்ட விபரீதமான செயல் தான் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனை. இந்த சோதனை, கொரிய தீபகற்பம் தொடங்கி சூப்பர் பவர் நாடுகள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா அந்த சோதனை சார்ந்த தனது கருத்தை தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அர்த்தம் கிடையாது :

"நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சோதனையானது வடகொரியாவின் தொழில்நுட்ப திறனுக்கு சான்று என்று அர்த்தம் கிடையாது" என்று அமெரிக்காவை சேர்ந்த நுக்லியர் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நுக் சோதனை :

மேலும் வல்லுநர்கள் "வேண்டுமென்றால் நுக் சோதனை குறித்த தரவு மற்றும் நுக் சோதனையின் நடைமுறை போன்ற விடயங்களை வடகொரியா கற்றுக்கொண்டுள்ளது என்று நம்பலாம்" என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உருவாக்கும் முறை :

அதாவது, ஹைட்ரஜன் வெடிகுண்டை உருவாக்கும் முறை மற்றும் அதை வெடிப்புக்குள்ளாக்குவது போன்ற விடயங்களை வடகொரியா கற்றுக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள் மேலும் நடத்தப்பட்டதாக கூறப்படும் பரிசோதனையானதை அமெரிக்க நுக் வல்லுநர்கள் நம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூர்மையான கவனிப்பு :

இருப்பினும் கூட ஆபத்தான மற்றும் தூண்டுதலுக்கு உரிய செயல்களை தொடர்ச்சியாக செய்வதால் வட கொரியா கூர்மையான கவனிப்பில் இருக்கிறது என்று அமெரிக்க மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏவுகணை அச்சுறுத்தல் :

அமெரிக்காவிற்கு எதிரான வட கொரிய ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளுவது எப்படி என்ற வழி எங்களுக்கு தெரியும் என்றும் அமெரிக்க மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் வெளிப்படையாக கூறியுள்ளது.

இரண்டு வகையாக ஏவுகணைகள் :

வடகொரியாவிடம் அமெரிக்க மேற்கு கடற்கரையை எட்டும் அளவிலான இரண்டு வகையாக ஏவுகணைகள் இருக்கலாம் என்றும் ஆனால் அவைகள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் அணு தகவல் திட்டத்தின் கூட்டமைப்பு நம்புகிறது.

பரிசோதனை :

ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைதனை (intercontinental ballistic missile) வடகொரியா பரிசோதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி திட்டங்கள் :

வடகொரியா தன்னுடைய அண்டை மற்றும் முக்கிய நட்பு நாடான சீனாவுடன் சில பின்னடைவுகளையும், பல வகையான சர்வதேச தடைகளை சந்திக்கும் போதிலும் கூட அதன் அணுசக்தி திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Nuke Test Did not Improve North Korea Technology says Us. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்