பாகிஸ்தானின் 'வீபரீத' வளர்ச்சி : அலறும் அமெரிக்க 'தின்க் டேன்க்'..!

Posted by:

'தின்க் டேன்க்' என்றால் மதியுரையகம் ஆகும். அதாவது, குறிப்பிட்ட சில முக்கியமான விடயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனம் அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்தையும் சாராத குழு ஆகும்.

அப்படியாக, சமீபத்தில் அமெரிக்க 'தின்க் டேன்க்' குழு பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்பம் பற்றியும், 2020-ஆம் ஆண்டு வாக்கில் பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுத வளர்ச்சி பற்றியும் ஆய்வு செய்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பாகிஸ்தான் :

அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வின்படி அணு ஆயுத தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ந்து வரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.

ஆய்வு :

அதாவது 2020 ஆம் ஆண்டு வாக்கில் பாகிஸ்தானிடம் 200 அணு ஆயுதங்கள் வரை இருக்கும் என்று கூறியுள்ளது அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வு.

அணு பிளவு பொருட்கள் :

சுமார் 200 அணு ஆயுதங்கள் வரை உருவாக்கும் அணு பிளவு பொருட்கள் பாகிஸ்தானிடம் உள்ளது என்று 'தின்க் டேன்க்' கருத்து கூறியுள்ளது.

ஆய்வறிக்கை :

அணு மூலோபாய நிலைப்புத்தன்மை (Strategic Stability in the Second Nuclear Age) என்ற பெயரில் அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசியா :

பல நாடுகள் அணு ஆயுத உற்பத்தியை குறைத்து கொண்டிருக்கும் அதே வேளையில் ஆசியாவில் அணு ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறது அந்த ஆய்வின் முடிவு.

முன்னிலை :

அதிலும் முக்கியமாக பாகிஸ்தான் தான் உலகிலேயே மிகவும் அதிகமான அணு ஆயுத தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

விநியோக அமைப்புகள் :

தனது அணு ஆயுதங்களுக்கு விமானம், ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் என 11 விநியோக அமைப்புகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கவனம் :

அண்டை நாடான இந்தியாவை மிரட்டும் நோக்ககத்திலேயே தான் பாகிஸ்தான் அணு ஆயுத வளர்ச்சியில் முழு கவனம் செலுத்துகிறது என்றும் வெளிநாட்டு உறவுகள் மீதான கவுன்சில் (Council on Foreign Relations) தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதி :

மேலும் பாகிஸ்தானின் அதிநவீன அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி கொள்ளாதப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு உறவுகள் மீதான கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
பாகிஸ்தானின் அணு ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி அமெரிக்க 'தின்க் டேன்க்' ஆய்வறிக்கை. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்