எந்திரன் கதை நிஜமானது, மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!!

By Meganathan
|

திரைப்படங்களில் வரும் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் நடக்காது என்ற காலம் மலையேறி விட்டது. திரைப்படங்களில் வரும் நம்ப முடியாத செயல்கள் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு நிஜமாகி வருகின்றது.

மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!!
அப்படியாக தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் காட்சி படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஒன்று நிஜமாகியுள்ளது. சிட்டி ரோபோட் மூளையில் திறன்களை கணினி மூலம் இன்ஸ்டால் செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. தற்சமயம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதை சாத்தியப்படுத்தும் முதல் ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர்.

மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!!
கலிஃபோர்னியாவை சேர்ந்த ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களை வேகமாக படிக்க செய்யும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். இது எந்திரன் படத்தில் காண்பிக்கப்பட்டதை போன்றே இருக்கின்றது. மனித மூளையில் நேரடியாக தகவல்களை வழங்கும் சிமுலேட்டர் ஒன்றை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் குறைந்த நேரத்தில் திறன்களை மனிதர்கள் கற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!!
நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலைகளை வேகமாக கற்பிக்க லோ-கரண்ட் எலக்ட்ரிக்கல் பிரெயன் ஸ்டிமுலேஷன் எனும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித மூளையில் நேரடியாக திறன்களை பதிவேற்றம் செய்ய கூடிய அதிநவீன மென்பொருள் எதிர்காலத்தில் கண்டறியப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக 2011 ஆம் ஆண்டே பாஸ்டன் பல்கலைக்கழகம், ஜப்பானை சேர்ந்த நியூரோசயின்ஸ் ஆய்வு நிறுவனம் போன்றவை கணித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

சிலர் இந்த கணிப்பில் சந்தேகம் தெரிவித்த நிலையில் ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரீஸ் இதனை செயல்படுத்தி காட்டியுள்ளது.

மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!!
ஹியூகஸ் ரிசர்ச் லபோரட்டரியின் மூத்த ஆய்வாளர் டாக்டர். மாத்யூ பிலிப்ஸ் மற்றும் சில ஆய்வாளர்கள் இதனை நடைமுறைப்படுத்த transcranial direct current stimulation (tDCS) எனும் வழிமுறையை பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த வழிமுறையானது ஆய்வில் பங்கேற்ற ஆறு பேரின் மூளையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிரெயின் ஸ்டிமுலேஷன் செய்யப்பட்டவர்கள், ஸ்டிமுலேட் செய்யப்படாதவர்களை விட சிறப்பாக செயல்பட்டதாக டாகடர் பிலிப்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் இந்த ஆய்வின் மூலம் பக்க வாத நோயில் பாதிக்கப்பட்டோரை வேகமாக குணமாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு tDCS மூலம் பிரெயின் ஸ்டிமுலேஷன் வழிமுறையை தினசரி மனித செயல்பாட்டில் பயன்படுத்த முடியும் என்றும் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

வரும் காலங்களில் இந்த ஆய்வின் முன்னேற்றங்களின் மூலம் கண்டறியப்படும் தொழில்நுட்பமானது கல்வி மற்றும் பயிற்சி போன்றவற்றில் பயன்படுத்த வழி செய்யலாம் என்றும் டாக்டர் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Now you can Upload Knowledge Directly into Your Brain Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X