அமேசானில் இப்போது பொருட்களை விற்கவும் செய்யலாம், எப்படி.??

தற்போது நீங்கள் அமேசான் மூலம் உங்களிடம் உள்ள பழைய பொருட்களை விற்கவும் செய்யலாம்..!

Written By:

இந்தியாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் இதுவரை உங்களுக்கு பொருட்களை குறைந்த விலையில் வழங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியையும் செய்து கொடுத்துள்ளது. இதன்படி தற்போது நீங்கள் அமேசான் மூலம் உங்களிடம் உள்ள பழைய பொருட்களை விற்கவும் செய்யலாம்

தற்போது இந்தியாவில் இதுபோன்ற சேவையை செய்து வரும் இபே, குவிக்கர், ஒ.எல்.எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் நேரடியாக மிகப்பெரிய போட்டியாளராக மாறியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் தற்போதைய குறிப்புகளின்படி பெங்களூரில் வசிப்பவர்கள் தாங்கள் விற்க வேண்டிய பொருட்களின் விபரம் மற்றும் விலையை மட்டும் தெரிவித்தால் போதும். அமேசான் நிறுவனமே நேரடியாக வந்து பேக்கிங் மற்றும் டெலிவரியை பார்த்து கொள்ளும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தேவையானவர்களுக்கு டெலிவரி

நீங்கள் விற்க வேண்டிய பொருள் இன்னொருவருக்கு தேவைப்படும் பட்சத்தில் அமேசான் நிறுவனமே நேரடியாக உங்களிடம் பொருட்களை பெற்று அந்த பொருள் தேவையானவர்களுக்கு டெலிவரி செய்தும் டீலிங்கை முடித்துவிடும் பொருட்களை விற்க விரும்புபவர்களின் பொருள் ரூ.1000 வரை இருந்தால் விற்பனை செய்பவர்களிடம் ரூ.10ம், ரூ.1000 முதல் ரூ.5000 வரை இருந்தால் ரூ.50, ரூ.5000க்கு மேல் இருந்தால் ரூ.100ம் கட்டணமாக பெற்று கொள்கிறது அமேசான் நிறுவனம்

முறைகேடுகளுக்கும் இடமின்றி

இந்த முறையால் பொருட்களை விற்பவரும், வாங்குவோரும் எவ்வித தொல்லைக்கும் ஆளாகாமல் இருப்பது மட்டுமின்றி எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமின்றி இருக்கும் இந்த நடைமுறை பழைய பொருட்களை விற்பவர்களுக்கு மிக எளிதாக டீல் முடிந்துவிடுவதுடன் தங்கள் பொருட்களுக்குரிய விலை கிடைத்த திருப்தியும் இருக்கும்.

எளிதான நடைமுறை

அதே சமயம் இந்த பொருட்களை வாங்குவோருக்கும் திருப்தியை அளிக்கும். இந்த நடைமுறை வெற்றிகரமாக இயங்கினால் பொருட்களை விற்பவர்களுக்கும் வாங்குவோர்களுக்கும் மிக எளிதான நடைமுறை இருக்கும்

பெங்களூரில் மட்டும்

இப்போதைக்கு அமேசான் நிறுவனம் பெங்களூரில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களுக்கும் இந்த சேவையை அமேசான் நிறுவனம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

2016-ன் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Amazon launches "Sell as Individual" service in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்