கூகுள் ஹாங்அவுட் ஐஎஸ்டி கால் செய்ய புதிய ஆப், நீங்க எப்ப டவுன்லோடு பன்ன போறீங்க?

By Meganathan
|

சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள புதிய ஆப் ஒன்றை வெளியிட்டது கூகுள். கூகுளின் ஹாங்அவுட் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் சர்வதேச அழைப்புகளை இன்டெர்நெட் மூலம் குறைந்த விலையில் செய்ய முடியும்.

கூகுள் ஹாங்அவுட் ஐஎஸ்டி கால் செய்ய கூகுளின் புதிய ஆப்...!

இந்த செய்தியை கூகுள்+ தளத்தில் வெளியிட்ட கூகுள் இன்று முதல் வாடிக்கையாளர்கள் ஹாங்அவுட் ஆப் பயன்படுத்தி உலகம் முழுவதும் இருக்கும் தங்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. இந்த ஆப் ஆன்டிராய்டு, ஐஓஎஸ் மொபைல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளுக்கு மிக குறைந்த விலையில் வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆன்டிராய்டு மூலம் கூகுள் ஹாங்அவுட் பயன்படுத்துபவர்கள் வாய்ஸ் கால் வசதியை செயல்படுத்த கூகுள் ப்ளேயில் இருக்கும் ஹாங்அவுட் டயலர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதே நேரம் ஐஓஎஸ் மற்றும் இணையம் மூலம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அவசியம் இருக்காது. கூகுள் அறிவித்திருக்கும் 24 நாடுகளுக்கு மட்டும் முதல் ஒரு நிமிடம் இலவசமாக கால் செய்ய முடியும், மேலும் இந்த வசதி கொண்ட நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது முதல் நிமிடம் இலவசம் என்ற தகவல் ஸ்கிரீனில் தெரியும், இந்த தகவல் கிடைக்காதவர்களுக்கு கூகுள் நிர்ணயித்த அழைப்பு கட்டனம் பொருந்தும்.

Best Mobiles in India

English summary
Now Make Voice Calls From Google Hangouts. Check out the full details of the app and the pricing details of the new app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X