'மண்ணை கவ்வியது' வடகொரிவின் 'முசுடன்' சோதனை..!

|

முசுடன் - வடகொரியாவின் மொபைல் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும் (Mobile intermediate-range ballistic missile). 2010 அக்டோபர் 10-ஆம் தேதி, கொரிய தொழிலாளர் கட்சியின் 65-வது ஆண்டு நிறைவு விழாவின் போது நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் தான் முசுடன் ஏவுகணை சர்வதேச சமூகத்திற்கு முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் ஆர் 27 சைப் நீர்மூழ்கி ஏவுகணை (R-27 Zyb submarine-launched missile) வடிவத்தை போலவே உருவாக்கப்பட்ட முசுடன் ஏவுகணை ஒன்றின் சோதனை இன்று காலை நடத்தப்பட்டதாக தெரிகிறது..!

முசுடன் ஏவுகணை :

முசுடன் ஏவுகணை :

இன்று காலை 6.10 மணிக்கு, இடை- தூர முசுடன் ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா நிகழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோல்வி :

தோல்வி :

ஆனால், ஏவுகணை சோதனையானது தோல்வியில் முடிந்ததாக வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே :

சிறிது நேரத்திலேயே :

ஏவுகணை செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொருங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, மேலும் வெடிப்பு எங்கே நிகழ்ந்தது என்பதை பற்றிய விவரங்களை கூற வடகொரிய ராணுவம் மறுத்து விட்டது.

ராணுவ விசாரணை :

ராணுவ விசாரணை :

இந்த தோல்வி குறித்த ராணுவ விசாரணை நடைபெறுவதாகவும், கடந்த வாரத்தில் நடைபெற்ற சோதனைகளில் இது இரண்டாவது முசுடான் தோல்வி என்றும் பெயர் குறிப்பிடாத வடகொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 முந்தைய சோதனை :

முந்தைய சோதனை :

இதற்கு முந்தைய சோதனையானது, வடகொரிய நிறுவனர் ஆன கிம் II சுங் (Kim II Sung) பிறந்த நாள் ஆன்று நிகழ்த்தப்பட்டது.

அமெரிக்கா மூலம் ட்ராக் :

அமெரிக்கா மூலம் ட்ராக் :

அந்த ஏவுகணை சோதனையானது அமெரிக்கா மூலம் 'ட்ராக்' (track) செய்யப் பட்டது என்பதும், ஆனால் எங்கு சென்று முடிந்தது என்பது பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரஷ்யா உருவாக்கிய நரகம் : 'டோபோல்-எம்'..!


உலகம், இந்தியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்..!


எக்ஸ்-ப்ளேன்ஸ் : மீண்டும் 'அக்னி பரீட்சை' நடத்தும் நாசா..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
North Korea launches missile; test fails. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X