நோக்கியா போன் டேப்ளெட் : ஒரே கல்லு இரு மாங்காய்.!!

By Meganathan
|

ஒட்ட மொத்த உலகையே தனது மொபைல் போன் கருவிகள் மூலம் ஆட்டிப்படைத்த ஒரு நிறுவனம் என்றால் நோக்கியா தான் என்பதை முதல் தலைமுறை மொபைல் போன் பயனர்கள் நன்கு அறிவர். நோக்கியா நிறுவனம் சில காலமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகி இருந்தாலும் அந்நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் சந்தையில் தன் கருவிகளை அறிமுகம் செய்யும் என நம்பப்படுகின்றது.

இந்நிலையில் நோக்கியா நிறுவனம் தயாரித்து வரும் ஸ்வான் வகை கான்செப்ட் போன் குறித்த விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். இந்த கருவியின் மூலம் அந்நிறுவனம் ஒரே கல்லில் இரு மாங்காய் வழங்க இருப்பது மட்டும் உறுதியாகின்றது எனலாம்..

ஹைப்ரிட் வகை

ஹைப்ரிட் வகை

நோக்கியாவின் ஸ்வான் கான்செப்ட் கருவியானது மொபைல் மற்றும் டேப்ளெட் இணைந்த ஹைப்ரிட் கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரென்டர்

ரென்டர்

இந்த கான்செப்ட் வடிவமைப்பு வியட்னாமை சேர்ந்த டேனி வின் கற்பனையில் ரென்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியானது ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் 4ஜிபி ரேம் வரை கொண்டிருக்கலாம்.

அம்சங்கள்

அம்சங்கள்

ஸ்வான் வகை கருவியில் 42 எம்பி பியூர் வியூ ப்ரைமரி கேமரா, 128ஜிபி மெமரி, குவாட் கோர் சிபியு மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கலாம்.

மடிப்பு

மடிப்பு

எச்டிசி சென்ஸ் பயன்படுத்தி, கருவியை மடித்தால் ஸ்மார்ட்போனாகவும், பின்புறம் சாஃப்ட் டச் டெக்ஸ்சர் இருக்கலாம். கருவியை திறந்தால் க்ரோம்புக் போன்று காட்சியளிக்கும்.

திரை

திரை

க்ரோம்புக் போன்ற கருவியில் இரு திரை ஒன்றை டிஸ்ப்ளே போன்றும் மற்றொன்றை விர்ச்சுவல் கீபோர்டு போன்றும் பயன்படுத்த முடியும். மூன்று திரைகளும் எட்ஜ் டூ எட்ஜ் கொண்டிருக்கின்றது. ஸ்மார்ட்போனிற்கு 5.5 இன்ச் திரையும் டேப்ளெட் கருவிக்கு 11 இன்ச் திரை இருக்கலாம்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஐபோன் 7 : கான்செப்ட் கனவு நிஜமாகுமா.??


இந்தியாவில் கேலக்ஸி எஸ்7, எஸ்7 எட்ஜ் : கதற வைக்கும் அம்சங்கள்.!!


மொபைலில் அந்தரங்களை மறைக்க அற்புத வழிகள்.!!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Nokia will be Back to Market with Stunning Swan concept Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X