நோக்கியாவின் முதல் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்?

By Meganathan
|

கடந்த நவம்பர் மாதம் ஆன்டிராய்டு மூலம் இயங்கும் நோக்கியா N1 என்ற டேப்ளெட் வகையை அறிமுகப்படுத்தியது. பல காரணங்களால் இந்த டேப்ளெட் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

நோக்கியாவின் முதல் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்?

நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே, இரு நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி நோக்கியாவின் ஒரு பகுதி இன்னும் செய்லபடுகின்றது, அந்நிறுவனம் பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது. மேலும் சில காலங்களுக்கு மட்டும் நோக்கியா சார்பில் எந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்களையும் தயாரிக்க கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

[2015 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப போக்குகள் இவை தான்]

இதையடுத்து நோக்கியாவின் நிறுவனம் டேப்ளெட் ஒன்றை வெளியிட்டுள்ளது, பாக்ஸ்கான் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த டேப்ளெட் ஆன்டிராய்டு மூலம் இயங்குகி்ன்றது என்று சொன்னால் நம்ப முடிகின்றதா. ஆச்சர்யப்பட வைக்கும் விதமாக இந்த டேப்ளெட் ஆன்டிராய்டு மூலம் தான் இயங்குகின்றது. மேலும் இதில் நோக்கியாவின் Z லான்ச்சர் கொண்டுள்ளது.

நோக்கியாவின் முதல் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்?

நோக்கியாவின் புதிய ஆன்டிராய்டு டேப்ளெட்டின் சிறப்பம்சங்கலை பொருத்த வரை நோக்கியா C1, 5 இனச் டிஸ்ப்ளே, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2ஜிபி ராம் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32ஜிபி இன்டெர்னல் மெமரியும் 8 மெராபிக்சல் ப்ரைமரி கேமராவும் இருப்பதோடு, கூகுளின் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகின்றது.

[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஆப்ஸ் தானாக அப்டேட் செய்வதை தடுப்பது எப்படி]

உண்மையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்பதை விட, ரகசியமாக வெளியான புகைப்படங்களை கொண்டு இதன் சிறப்பம்சங்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. எனினும் நோக்கியா பிரான்டில் வெளியாகும் ஸ்மார்ட்போனாக இன்றும் பலர் காத்திருக்கின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Nokia's First Android Smartphone? Rumours started, claiming Nokia C1 as the company's first Android device.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X