நோக்கியாவின் ரீ-என்ட்ரி 'இந்த மாசம்' நிச்சயம் நடக்கும்.!

நோக்கியாவின் புதிய கருவி வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய நோக்கியா கருவி வெளியாகும் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்...

Written By:

நோக்கியா பிரியர்கள் சில காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் சம்பவம் அடுத்த ஆண்டு நடைபெறும் எனத் தெரிய வந்திருக்கிறது. நோக்கியா பிரான்டு கொண்ட ஆண்ட்ராய்டு கருவி ஒன்று வெளியாகும் எனப் பல காலமாகக் கூறப்பட்டு வந்தது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய நோக்கியா கருவி அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உறுதி

நோக்கியா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் 2017 ஆம் ஆண்டு நோக்கியா பிரான்டு திரும்ப வரும் காலமாக இருக்கும், மற்ற நிறுவனங்களுக்குப் பழையபடி போட்டியாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருவிகள்

நோக்கியா 5320, நோக்கியா 1490 மற்றும் நோக்கியா D1C என மூன்று கருவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என்பன போன்ற தகவல்கள் வெளியாகின. எந்தக் கருவி நிச்சயம் வெளியாகும் என்பதை விட வெளியாகும் கருவி நிச்சயம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரான்டு

இனி வரும் நோக்கியா கருவிகள் நிச்சயம் நோக்கியா பிரான்டு கொண்டிருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. எனினும் இந்தக் கருவியினை எச்எம்டி குளோபல் நிறுவனம் தயாரிக்கிறது. எச்எம்டி நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நோக்கியா கருவிகளைத் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ளது.

நோக்கியா D1C

அடுத்த ஆண்டு நோக்கியா நிறுவனம் வெளியிட இருக்கும் கருவி நிச்சயம் நோக்கியா D1C தான் எனத் தற்சமயம் வரை எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 13 எம்பி பிரை்மரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

அறிமுகம்

நோக்கியா நிறுவனத்தின் புதிய கருவி MWC 2017 பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா நிறுவனத்தின் சிஇஒ தெரிவித்தார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது அடுத்த ஆண்டு நோக்கியா நிறுவனத்தின் கருவி வெளியாவது மட்டும் உறுதியாகிவிட்டது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Nokia’s Android Phones Could Debut in February
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்