விலை ரூ.10,000/- மற்றும் நோக்கியா டி1சி அம்சங்கள், ஆன்லைனில் கசிந்தன.!

அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா டி1சி கருவியின் அம்சங்கள் மற்றும் விலை ஆகிய தகவல்கள் ஆன்லைன் கசிந்துள்ளன மற்றும் இக்கருவி ரூ.10,000/-ற்கு துவங்கலாம்.

Written By:

பெரும்பாலான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக மட்டுமில்லாது, போட்டியாளர்களின் பீதியாவாகவும் திகழும் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வெளியாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. நோக்கியாவின் டி1சி கருவியானது 2017-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017-ல் தொடங்கப்பட இருக்கிறது, உடன் மீண்டும் நோக்கியா முன்பை போலவே சந்தையை ஆளும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

பல முறை பல வகையான லீக் தகவல்களாக வெளியாகி நோக்கியா அதன் மறுவருகை சார்ந்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக்கொண்டே போகிறது. அப்படியாக தற்போது வெளியாகியுள்ள லீக் தகவல்கள் ஆனது நோக்கியா டி1சி கருவியின் விலை ரூ.10,000/-ல் ஆரம்பிக்கும் என்ற தகவலை வழங்கியதோடு அதன் அம்சங்கள் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இரண்டு வகை

நோக்கியா பவர் யூசர் என்ற ஒரு அறிக்கையின்படி, புதிய டி1சி கருவியானது இரண்டு வகைகளில் வரும் என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் ரூ.10,000/- மதிப்பிடப்பட்டுள்ள 2ஜிபி ரேம் மாறுபாடாகவும் மற்றும் ரூ.13,000/- என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 3ஜிபி ரேம் மாறுபாடாகவும் வெளியாகும் என்று அறிவிக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விலை நிர்ணயம்

வெளியான புதிய அறிக்கை வழக்கமாக லீக்ஸ் தகவல்கள் அளிக்கும் இடத்தில இருந்து கிடைக்கப்பெறவில்லை என்பதால், இந்த விலை நிர்ணயத்தை உப்பில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்து கொள்ளவது போல் தான் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் முன்தைய அறிக்கைகளில் கசிந்த அம்சங்கள் சார்ந்த தகவல்களையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

இரண்டு டிஸ்ப்ளே அளவு

என்பியூ (NPU) கருத்துப்படி, நோக்கியா டி1சி ஒரு ஸ்னாப்டிராகன் 430 செயலி, அட்ரெனோ 505 ஜிபியூ, ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஆகியவைகள் கொண்ட இரண்டு டிஸ்ப்ளே அளவுகளில் (5 இன்ச் முழு எச்டி மற்றும் 5.5 அங்குல முழு எச்டி) வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கேமிரா

அதுமட்டுமின்றி சிறிய அளவிலான கருவி 13 எம்பி-யும் பெரிய அளவிலான கருவி 16எம்பி பின்புற கேமிராவும், இரண்டுமே 8 எம்பி முன்பக்க கேமிராவும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

அடுத்த கட்ட முக்கிய சந்தை

நோக்கியாவின் இந்த மறுவருகையில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும், குறிப்பாக அடுத்த கட்ட முக்கிய சந்தையை வழங்கும் அதனால் தான் நோக்கியா பிராண்ட் மீண்டும் செயல்பட துவங்கியதும் கருவிகளின் விலை ரூ.10,000/- என்ற ஆரம்ப விலையில் வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கலாம். தயாரிக்கப்படும் நோக்கியா சாதனங்களை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Nokia D1C pricing, specifications leaked; to start at Rs 10,000: Report. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்