நோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..!

By Meganathan
|

நோக்கியா - மொபைல் போன் சந்தையில் உலகையே ஆட்டிப்படைத்து தரமான கருவிகளை குறைந்த விலை மக்களுக்கு வழங்கிய நிறுவனம் என்றாலும் இன்று சந்தையில் இல்லை என்பது பலருக்கும் ஏக்கமாக தான் இருக்கும்.

நோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..!

நோக்கியா ப்ரியர்களை உற்சாகமூட்டும் செய்தியை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சூரி அறிவித்திருக்கின்றார். 2016 ஆம் ஆண்டு மொபைல் சந்தையில் மீண்டும் நுழைகின்றது நோக்கியா.

மைக்ரோசாப்ட் கைப்பற்றிய பின் நோக்கியா நிறுவனம் என்1 டேப்ளெட் கருவியை முதலில் வெளியிட்டது. மைக்ரோசாப்ட் - நோக்கியா நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் அடுத்தாண்டின் நான்காம் காலாண்டு வரை ஸ்மார்ட்போன்களை நோக்கியா பெயரில் விற்பனை செய்ய முடியாது, மேலும் பீச்சர் போன்களை அடுத்த பத்தாண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.

நோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..!

அடுத்தாண்டு நோக்கியா நிறுவனம் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மைக்ரோசாப்ட் கைப்பற்றியதற்கு பின் நோக்கியா நிறுவனம் நோக்கியா நெட்வர்க்ஸ், நோக்கியா டெக்னாலஜீஸ், என மூன்றாக பிரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia CEO Rajeev Suri, revealed the company's plans to re-enter the mobile phone business late next year.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X