ஆண்டு இறுதியில் திரும்ப வரும் நோக்கியா.!!

Written By:

மொபைல் போன் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிடம் நோக்கியா அணுகுமுறை சரியாக வேலை செய்யாததால் பின்னடைவைச் சந்தித்தது.

ஆண்டு இறுதியில் திரும்ப வரும் நோக்கியா.!!

பின் நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன் படி நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வாக்கில் நோக்கியா பிரான்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் சீன செய்தி நிறுவனத்தின் செய்தி ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதியில் திரும்ப வரும் நோக்கியா.!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறைவடைய இருக்கும் நிலையில் நோக்கியா நிறுவனம் தான் விட்ட இடத்தைப் பிடிக்க முனைப்புடன் களமிறங்க இருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக நோக்கியா கருவிகளை தயாரித்து வந்த மையங்களை தவிர்த்து எச்எம்டி குளோபல் எனும் பின்லாந்து நிறுவனம் புதிய நோக்கியா கருவிகளை தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் படி நோக்கியா கருவிகளை தயாரிக்க நோக்கியா மற்றும் எச்எம்டி நிறுவனங்களிடையே பத்து ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nokia Branded Android Smartphones, to launch this year Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்