விரைவில் வெளியாகும் நோக்கியா 5320 மற்றும் ஆர்எம்-1490 ஸ்மார்ட் போன்கள்..!?

Written By:

மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன் மீண்டும் உலக ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமிக்கபோகிறது. ஆம் அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியாவின் அடுத்த அதிரடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் எந்த நிலையை அடைந்துள்ளன, என்னென்ன சிறப்பம்சங்கள் பெற தயாராகி கொண்டிருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஒப்பந்தம் :

கடந்த மே மாதம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட் உற்பத்தி செய்ய புதிதாக அமைக்கப்பட்ட பின்னிஷ் உற்பத்தியாளரான எச்எம்டி க்ளோபல் நிறுவனத்துடன் நோக்கியா ஒப்பந்தம் செய்தது.

இன்டர்நெட்டில் கசிந்தது :

சில டாப் -எண்ட் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சார்ந்த விடயங்கள் இன்டர்நெட்டில் கசிந்தது அதுதான் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான ஆரம்ப அறிமுகமாக இருந்தது.

இரண்டு :

இப்போது, நோக்கியாவின் இரண்டு ஸ்மார்ட்போன்களின் சில சந்தேகத்திற்குரிய விவரக்குறிப்பு சார்ந்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

நோக்கியா 5320 :

முதல் நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது நோக்கியா 5320 என்ற பெயர் கொண்டதாகவும் அது குவாட்-கோர் ப்ராசஸர் உடன் 2ஜிபி ரேம் மூலம் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்க முறைமை :

மேலும் அது பழைய ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் இயங்குதளம் மூலம் இயங்கும் என்றும் தெரிகிறது.

ஆர்எம்-1490 :

இரண்டாவது நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது ஆர்எம்-1490 என்ற பெயர் கொண்டதாகவும் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 500 எம்எச்இசட், ஏஎம்டி ஏ8-5545எம் ப்ராசஸர் (500MHz , AMD A8-5545M) மூலம் இயக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் :

இந்த இரண்டாவது நோக்கியா ஸ்மார்ட்போனும் ஒரு பழைய ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு தான் இயங்குமாம்.

முரண் :

தற்போது வெளியாகியுள்ள இந்த குறிப்புகள் அனைத்தும் கடந்த முறை நிகழ்ந்த கசிவுகளுடன் ஒப்பிடும் பொது முரண்பட்டதாக இருக்கிறது.

மறுசிந்தனை :

ஆக இது உண்மையாக இருந்தால், இந்த தொழில்நுட்ப குறிப்புகள் எதுவும் நோக்கியா ரசிகர்களுக்கு மிக உற்சாகம் அளிக்கும் ஒன்றாக இல்லை, நோக்கியா மேலும் பல மறுசிந்தனை செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோதனை ஓட்டம் :

மறுபக்கம் இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு நிகழ்தகவு தான், இவைகள் வெறும் சோதனை ஓட்டமாக கூட இருக்கலாம், இறுதியாக வெளிவரும்தகவல்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கலாம் என்ற ஆதரவும் எழுந்துள்ளது.

க்யூஎச்டி :

முந்தைய கசிவு செய்தியில் இரண்டு எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 2கே தீர்மானம் (க்யூஎச்டி), 5.2 அங்குல மற்றும் 5.5 அங்குல ஸ்க்ரீன், மற்றும் ஐபி68 (IP68) சான்றிதழ் கொண்டு வெளிவரும் என்று பரிந்துரைத்தது.

ஆண்ராய்டு 7.0 நவ்கட் :

மேலும் அந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப் 820 சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் சமீபத்திய இசட் லான்ச்சர் யூஐ அமைப்பு அடிப்படையிலான ஆண்ராய்டு 7.0 நௌக்கட் கொண்டு வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க :

விமானங்களில் வை-பையை அனுமதிக்க இந்திய அரசு திட்டம்..!


ஐபோனின் பின்புறத்தில் சிறிய ஓட்டை, இது எதற்கு.??

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Nokia-Branded Android Smartphones Hit Geekbench, Tipping Specifications Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்