நோக்கியா, பிளாக்பெர்ரியின் பல நூறு கோடி பட்ஜெட் VS ஜியோவின் ரூ.999/- பட்ஜெட்.!

எது ஒன்றை ஒன்று வெல்லும்.?? எது ஒன்றை ஒன்று கொல்லும்.!?

|

கிளாசிக் மொபைல் நிறுவனங்களான நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி மொபைல் போன் தயாரிப்பாளர்களும் இந்தியாவில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்து மொபைல் போன் மார்க்கெட்டில் மீண்டும் களமிறங்க உள்ளனர். தங்களுக்கே உரிய உத்திகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு\ அடுத்த மாதம் இந்த இரண்டு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஏற்கனவே நோக்கியா அதன் மருவருகையை பல புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வெளியீடு மூலம் பலப்படுத்திவிட்ட நிலையில் நோக்கியாவின் ஐகானிக் 3310 கருவியானது மே மாத இறுதியில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து இந்தியாவில் அறிமுகப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்நேரத்தில் மேலும் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்திய சந்தைக்குள் ரீஎன்ட்ரி என்ற தகவல் மேலும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

பிளாக்பெர்ரி நிறுவனத்தை பொறுத்தமட்டில் இந்திய வர்த்தக உரிமையாளரான ஆப்டீமஸ் குரூப் தகவலின் கீழ் ஜூன் மாதத்தில் ரூ.40,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட பிளாக்பெர்ரி மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. மறுபக்கம் பட்ஜெட் கருவியாக ஜூலை மாத வாக்கில் ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட பிளாக் பெரிய மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீண்டும்

மீண்டும்

இதை உறுதி செய்யும் வண்ணம் இந்தியாவில் உள்ள பிளாக்பெர்ரி வர்த்தக உரிமையாளரான ஆப்டீமஸ் குழுவானது 200 கோடி ரூபாய் செலவில் மீண்டும் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு சந்தையில் ஊடுருவலை விரிவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.2,000 கோடி

ரூ.2,000 கோடி

4,000 சில்லறை விற்பனையாளர்களான பிளாக்பெர்ரி நிறுவனம், சில்லரை சங்கிலிகள் மற்றும் பிரீமியம் அண்டை அங்காடிகளை உள்ளடக்கியது என்பதால் இந்த நிதியாண்டில் ரூ.2,000 கோடி வரை விற்பனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காரணி

காரணி

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் சந்தையில் கணிசமான இருப்பைக் கொண்டிருப்பதால், இந்திய சந்தையை மீண்டும் சந்திப்பதில் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரிஆகிய இரு பிராண்டுகளுக்கும் சற்று கடினமாக இருக்கலாம். இருப்பினும் வாடிக்கையாளர்களைப் பெற முயற்சிக்கும் நோக்கியா அதன் பிராண்ட் பெயர் மற்றும் கடினத்தன்மையை காரணியாக கொள்ளும் மீறுபக்கம் பிளாக்பெர்ரி அதன் ஸ்மார்ட்போன்களின் பாதுகாப்பு பலத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

500 மில்லியன் டாலர்

500 மில்லியன் டாலர்

ஒருபக்கம் 500 மில்லியன் டாலர் மார்க்கெட்டிங் செலவில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இந்தியாவில் இருக்கும் என்று நோக்கியா பிராண்ட் கருவிகளைதயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி அறிவிக்க மறுபக்கம் மலிவான ஜியோ 4ஜி கருவிகள் சந்தையை ஆட்கொள்ளும் சீன நிறுவனங்களையும் துவம்சம் செய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரத்தில் இருந்து புகைப்படம்

ஆதாரத்தில் இருந்து புகைப்படம்

கடந்த ஜனவரி மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.999/-ல் இருந்து ரூ.1,500/- என்ற விலை நிர்ணயத்திற்கு இடையிலேயான 4ஜி கருவியை அறிமுகம் செய்யப்போவது சார்ந்த முதல் தகவல் வெளியானது. அதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு அநாமதேய ஆதாரத்தில் இருந்து புகைப்படம் ஒன்றும் கிடைக்கப்பெற்றது. அந்த புகைப்படத்தில் உள்ள கருவி ஒரு ரிலையன்ஸ் ஜியோ வோல்ட் அம்சம் கொண்ட தொலைபேசியாக இருக்கும் என்றும் மேலும் வெளியான அந்த லீக் புகைப்படத்தில் இருந்து அக்கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் அறியப்பட்டது.

ரூ.999/- மற்றும் ரூ.1500/-

ரூ.999/- மற்றும் ரூ.1500/-

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் முடிவு அதனை தொடர்ந்து ப்ரைம் சேவை ஆரம்பம் ஆகிய விடயங்கள் ஒரு நிலைப்பாட்டை அடைந்த தருணத்தில் ரூ.999/- மற்றும் ரூ.1500/- என்ற விலை நிர்ணயத்தில்க் இரண்டு ஜியோ 4ஜி போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது.

இரண்டு தொலைபேசிகள்

இரண்டு தொலைபேசிகள்

சேஇட்லவுட் வலைதளத்தின்படி இன்று மார்ச் 3-ஆம் தேதி ரிலையன்ஸ் அதன் இரண்டு தொலைபேசிகள் துவக்கப் போகிறது. மற்றும் அந்த இரண்டுமே 4ஜி தொலைபேசிகளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் அந்த 2 கருவிகளும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஜியோ கடைகளில் கிடைக்கும். ஜியோ நிறுவனத்தின் பிரபலத்தன்மை காரணமாக வெளியான சில நிமிடங்களில் இக்கருவிகள் விற்றுத்தீரலாம் என்றும் வெளியான அறிவிப்பு தெரிவிக்கிறது.

பொத்தான்கள்

பொத்தான்கள்

இந்தியாவில் இன்னும் ஏகப்பட்ட மக்கள் தொகையினர் ஒரு 4ஜி தொலைபேசி ஆதரவு இல்லாமல் இருக்கும் இந்நிலையில் வெளியாகும் இக்கருவி நிச்சயமாக அவர்களை 4ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க உதவும் என்றும் இக்கருவிகளில் உள்ள கட்டமைக்கப்பட்ட பொத்தான்கள் மூலம் நேரடியாக ஜியோ பயன்பாடுகளின் சேவைகளை அனுபவிக்கலாம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

8 ஜிபி

8 ஜிபி

இக்கருவிகள் ஒரு அடிப்படை தொலைபேசிகளாக இருப்பினும் 8 ஜிபி அளவிலான உள் நினைவகம் மற்றும் வைஃபை ஆதரவு கொண்டிருக்கும். ஆனால் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்காது. எனினும், நீங்கள் இந்த தொலைபேசிகளில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவைகளை பயன்படுத்த முடியும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன

ரூ.999/- கருவி

ரூ.999/- கருவி

இக்கருவிகள் அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கும் போது ரூ.999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள கருவி 2 எம்பி அளவிலான முதன்மை கேமரா, விஜிஏ முன்பக்க கேமரா, டி9 கீபேட், வைஃபை ஆதரவு ஆகியவைகள் கொண்டிருக்கலாம். மறுபக்கம் ரூ.1500/- என்ற விலை நிர்ணயம் கொண்ட கருவி 5 எம்பி அளவிலான முதன்மை கேமரா,உடன் அதே டி9 கீபேட், வைஃபை ஆதரவு ஆகியவைகளை கொண்டிருக்கலாம்.

ஆச்சரியப்படுவதற்கில்லை.!

ஆச்சரியப்படுவதற்கில்லை.!

ஒருபக்கம் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களுக்கு சீன நிறுவங்களின் ஸ்மார்ட்போன்கள் நெருக்கடியை கொடுக்க, மறுபக்கம் பீச்சர் கருவிகள் போட்டியில் ஜியோ பெரிய சவாலை வழங்க தயாராக இருக்கும். ஒருவேளை பழைய நோக்கியா கருவிகள் போல ஜியோ பீச்சர் கருவிகள் மாபெரும் வெற்றியை அடைந்தால் ஜியோ நேரடியாக ஸ்மார்ட்போன் தயாரிப்பு சந்தைக்குள் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Best Mobiles in India

English summary
Nokia, BlackBerry are re-entering the Indian market with investment of Rs 200 crore; will launch new phones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X