மொபைல் டவர்கள் வெளிக்கிடும் கதிர்வீச்சு, நம்மை பாதிக்கிறதா .? மழுப்பும் அரசாங்கம்..?

Written By:

கதிர்வீச்சு (radiation) என்பது இயற்பியலில் சக்தியுள்ள துகள்கள் அல்லது அலைகள் ஆனது ஒரு ஊடகத்தினூடாக அல்லது ஒரு வெளியினூடாக (through space or through a material medium) கடந்து செல்வதைக் குறிக்கும்.

அப்படியான, கதிர்வீச்சானது மனித உடல் நலத்திற்கு பாதகம் விளைவிக்கும் என்றும், முக்கியமாக மொபைல் டவர்களுக்கு அருகமையில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சானது, மனித உடல் நலத்திற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த விதமான அறிவியல் விளக்கமும் இல்லை என்று மக்களவை கூறியுள்ளது.

#2

உலகளவில், குறிப்பாக அமெரிக்க மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் எக்கச்சக்கமாக மொபைல் கோபுரங்கள் பயன்படுத்தப்படும் போதிலும் இந்தியாவில் மட்டுமே கதிர்வீச்சு பாதிப்புகள் என்ற விவாதம் எழுகிறது.

#3

குறிப்பாக இந்த விவாதமானது இந்தியாவை-மையப்படுத்திய ஒன்றாகவே இருக்கிறது என்று தனது அதிருப்தி தெரிவித்துள்ளார் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

#4

மொபைல் கோபுரங்கள் மூலம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கணிசமான அளவில் கூட ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

#5

மேலும் "கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரையிலாக மொபைல் டவர் ரேடியேஷன் சார்ந்த ஆய்வு நடத்திய உலக சுகாதார மையம் (WHO) கூட இதன் மூலம் எந்த விதமான மிரட்டலும் இல்லை என்று கூறியுள்ளதையும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

#6

இந்தியாவில், மொபைல் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு தாக்கம் சார்ந்த அனுபவ அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டு இருக்கின்றனவா என்று கேள்வியும் மக்களவையில் எழுப்பபட்டுள்ளது.

#7

குறிப்பாக, பறவைகள் மொபைல் கோபுரங்களை விட்டு விலகியே பறப்பதற்கும், மொபைல் டவர்களில் அமராமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்ற கேள்வி எழுப்பட்ட்டது.

#8

அலகாபாத் உயர் நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு நடத்திய அறிவியல் ஆய்வில் இருந்து மொபைல் கோபுரங்கள் மனித சுகாதாரத்திற்கு எந்தவிதமான பாதகமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

#9

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 24,000 மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டு இணைப்பு வசதிகளின் திறன் அதிக அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், மேலும் 20,000 கோபுரங்கள் அமைக்கப் பட இருக்கிறது என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்பு அறிவித்திருந்தார்.

#11

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
No Health Hazards Due to Radiation From Mobile Towers. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்