நெக்சஸ் 6 விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது..!

Written By:

இந்தியாவில் கூகுளின் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.34,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. நெக்சஸ் 6, 32 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999க்கும், 64ஜிபி வகை மாடலின் விலை ரூ.49,999 வெளியாகி தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் 32 ஜிபி மாடலின் விலை ரூ.34,999க்கும் 64 ஜிபி மாடலின் விலை ரூ.39,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நெக்சஸ் 6 விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது..!

மேலும் ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்சேன்ஜ் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 மதிப்பிலான சலுகைகளை பெற முடியும். இதன் மூலம் ரூ.29,999 மற்றும் 34,999க்கு நெக்சஸ் 6 கிடைக்கும். எனினும் இந்த விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஸ்டோரில் இரு நெக்சஸ் கருவிகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதோடு, இந்த விலை குறைப்பு முதல் முறை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெக்சஸ் 6 ஸ்மார்ட்போனில் 6 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் க்யூஎச்டி ரெசல்யூஷன், 2.7 ஜதிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப், 13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமராவும் 3220 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Google's flagship smartphone Nexus 6 has received a price cut in India, bringing its price down to Rs 34,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்