ஆமாம்.. ஜியோவின் அந்த ரூ.999/- 4ஜி ஸ்மார்டபோன், எப்போ வரும்.?

மிகவும் மலிவான விலைக்கு 4ஜி ஸ்மார்ட்போன் என்ற அடுத்த சந்தை புரட்சிக்கு ரிலையன்ஸ் ஜியோ தயார். அதன் விலை நிர்ணயம் என்ன..? அம்சங்கள் என்னென்ன.? எப்போது வெளியாகும்..?

|

பல தொலைத்தொடர்பு புரட்சிகளை இந்திய சந்தையில் நடத்திய ரிலையன்ஸ் ஜியோ அதன் அடுத்த சந்தை புரட்சிக்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. அதாவது, ரூ.1500/-க்கும் குறைவான விலையில் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட 4ஜி கருவிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத் துறையின் ஒரு கேம் சேஞ்சர் ஆக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி இணைய அணுகல் மட்டுமின்றி ரூ.2,990/- என்ற விலையில் இருந்து மிகவும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களையும் வழங்கியது. இப்போது ரூ.2,990/- என்ற விலை நிர்ணயத்தை மேலும் பல படிகள் குறைத்து ரூ.1500/- என்ற விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

ரூ.1,500/-க்கும் குறைவான விலையில்

ரூ.1,500/-க்கும் குறைவான விலையில்

முன்னர் வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி ரிலையன்ஸ் ஜியோ தொலை தொடர்பு ஆபரேட்டர் சந்தையில் மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் ரூ.1,500/-க்கும் குறைவான விலையில் வோல்ட் அம்சம் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

ரூ.999/- மற்றும் ரூ.1,500/-

ரூ.999/- மற்றும் ரூ.1,500/-

ஆய்வாளர்கள் படி, ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 4ஜி கருவிகளின் விலை ரூ.999/- மற்றும் ரூ.1,500/- ஆகிய விலைகளுக்கு இடையே இருக்கலாம். இந்த வோல்ட் போன்கள் சந்தைக்கு வந்த பின்னர் பீச்சர் கருவிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மேம்படுத்தல்களுக்கு மாறாக பீச்சர் கருவிகளில் இருந்து வோல்ட் கருவிகளுக்கான மேம்பாடு நிகழும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவியின் அம்சங்கள்

கருவியின் அம்சங்கள்

2017-ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையின் மிகபெரிய சவாலாக கருதப்படும் இந்த கருவியின் அம்சங்களை பொருத்தமட்டில் முன்பக்க மற்றும் பின்புற கேமிராக்கள் இடம்பெறும் வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. உடன் ஜியோவின் லைவ் டிவி, ஜியோ சாட் மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் ஆகிய பயன்பாடுகளும் இக்கருவியுடன் சேர்ந்தே வெளிவரலாம்.

தனிப்பட்ட விற்பனை புள்ளி

தனிப்பட்ட விற்பனை புள்ளி

உடன் பணமில்லா பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஜியோ மணி ஏன டிஜிட்டல் வேலட் ஆப்பும் இக்கருவிகளில் உள்ளடக்கமாக இருக்கலாம். மற்றும் வோல்ட் ஆதரவு எச்டி வாய்ஸ் கால் ஆதரவு மற்றும் வீடியோ கால் ஆகிய அம்சங்கள் தான் இக்கருவியின் தனிப்பட்ட விற்பனை புள்ளியாக ரிலையன்ஸ் ஜியோ நிர்ணயிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

அதிவேக 4ஜி அணுகல்

அதிவேக 4ஜி அணுகல்

மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் அபார வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழும் இலவச வரம்பற்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு, வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அதிவேக 4ஜி அணுகல் ஆகியவைகளும் இக்கருவிகளில்தற்போது வெளியாகியுள்ள கட்டண திட்டங்களின் கீழ் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

எப்போது தொடங்கப்படும்

எப்போது தொடங்கப்படும்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த மிக மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள் எப்போது தொடங்கப்படும் என்ற எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இக்கருவி வெளியானல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் தொலைத் தொடர்பு சந்தையில் பிற போட்டியாளர்களுக்கான மேலும் பல இடையூறுகளை நிர்வகிக்கும் என்பது மட்டும் உறுதி.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ முதல் ஏர்டெல் வரை எல்லோருக்கும் ஆப்பு.? உஷராகிக்கோ.!!

Best Mobiles in India

English summary
Next disruptive move by Reliance Jio: A VoLTE feature phone below Rs 1500. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X