ஐபோன் பயன்கள், இது தெரியுமானு பாருங்க!?

Written By:

ஆப்பிள் ஐபோன் - இந்தக் கருவியை அதிகம் பிடித்தவர்கள் விலை அதிகம், பாதுகாப்பு அதிகம் என்றும் பிடிக்காதவர்கள் ஐபோனில் அது இல்லை, இது இல்லை எனக் குறை கூறுவதுமாக இருப்பதும் வாடிக்கையான ஒன்று தான்.

உலக பிரபலமான ஐபோன் கருவிகளை பலரும் பயன்படுத்த முக்கிய காரணம் - இதை வைத்திருந்தால் கிடைக்கும் மரியாதை தான் எனலாம். வெறும் மரியாதை மற்றும் வியாபார ரீதியாக என ஐபோன் பயன்படுத்தும் காரணம் எதுவானாலும் ஐபோனின் பயன்களில் இதெல்லாம் தெரியுமா எனப் பாருங்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இருப்பிடம்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதைச் செய்ய குறுந்தகவலை டைப் செய்து பின் வலது புறத்தின் மேல் இருக்கும் Details என்ற ஆப்ஷனை கிளிக் செய்து send my current location என்ற ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது நீங்கள் இருக்கும் முகவரி உங்களது நண்பருக்கு மேப்ஸ் மூலம் அனுப்பப்பட்டு விடும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல் அனுப்பும் போது மல்டி டாஸ்கிங் செய்ய மின்னஞ்சல் செயலியின் தலையங்கத்தை அழுத்திப் பிடித்து கீழ் பக்கமாக இழுக்க வேண்டும், இவ்வாறு செய்யும் போது ஒட்டு மொத்த செயலியும் மினிமைஸ் செய்யப்படும். பின் அழுத்தம் குறையாமல் மேல் புறம் இழுத்தால் மீண்டும் மின்னஞ்சல் செய்ய முடியும்.

சிரி

சிரியைச் சத்தமாக வாசிக்கச் செய்ய முடியும். இதற்கு முதலில் Settings >> General >> Accessibility >> Speech ஆப்ஷன்களை கிளிக் செய்து பின் Speak selection மற்றும் Speak Screen ஆப்ஷன்களை ஆன் செய்ய வேண்டும். பின் வாசிக்க வேண்டிய தளத்தினை ஓபன் செய்து திரையில் இருந்து இரு விரல்களைக் கொண்டு மேல் இருந்து கீழ் பக்கமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.

கற்பித்தல்

சிரி எவ்வாறு வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்க முடியும். இதைச் செய்ய சிரி தவறாக உச்சரிக்கும் வார்த்தையை எடுத்துரைத்து பின் சரியான உச்சரிப்பைத் தெரிவிக்க வேண்டும். சரியான உச்சரிப்பைத் தெரிவித்தது திரையில் இருந்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் சிரி சரியான உச்சரிப்பை வழங்கும்.

புகைப்படம்

ஐபோனில் கேமரா பயன்படுத்தி புகைப்படங்களை எடுக்கும் போது வால்யூம் அப் அல்லது வால்யூம் டவுன் பட்டன்களை கொண்டு போட்டோ எடுக்க முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
New uses Of iPhone Which You didn't knew Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்