
குழந்தைகள் மொபைலை சரியான வழியில் பயன்படுத்துகிறார்களா? என்று கண்கானிக்கும் வகையில் ஒரு புதிய வசதியை வழங்க உள்ளது பெமிலோ நிறுவனம். இந்த வசதியை வோடாபோன் சிம் கார்டின் மூலம் பயன்படுத்தலாம்.
இப்போதெல்லாம் குழந்தைகள் கையிலும் மொபைல்கள் இருப்பது அவசியமாகவிட்டது. இன்னும் சொல்லப்போனால் தொழில் நுட்ப முறைகள் நிறைந்த கல்வி முறைகளும் வந்துவிட்டது. இதனால் குழந்தைகள் மொபைல் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
இதை பெரும்பாலான பெற்றோர்கள் அதிகம் விரும்புவதில்லை. ஏனெனில் இதனால் குழந்தைகளின் நடவடிக்கைகள் சம்மந்தாமான சில பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கலாம் என்கிறது பெமிலோ நிறுவனம்.
8-இல் இருந்து 16 வசது வரை உள்ள குழந்தைகள் மொபைலில் உள்ள இன்டர்நெட் வசதியின் மூலம் ஆபாசம் சம்மந்தமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் பெமிலோ நிறுவனம் வழங்கும் பிரத்தியேக சேவையின் மூலம் ஆபாசம் சம்மந்தப்பட்ட வலைத்தளங்கள் ப்ளாக் செய்யப்பட்டுவிடும்.
இதனால் ஆபாசம் சம்மந்தமான விஷயங்களை வலைத்தளத்தில் பார்க்க முடியாது. குழந்தைகள் யாருடன் சாட் செய்கிறார்கள், எந்த நண்பர்களுடன் அதிகம் நெருங்கி பழகுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களை பெற்றோர் எளிதாக கண்கானிக்க முடியும்.
புதிய நண்பர்களை கான்டாக்டில் சேர்க்க வேண்டும் என்றால் கூட பெற்றோர்கள் அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே, சேர்க்க முடியும். குழந்தைகள் அதிக நேரம் மொபைல்களை பயன்படுத்துவது பற்றி இனி பெற்றோர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த வசதியை அப்ளிக்கேஷன் போல அல்லாமல் சிம் கார்டின் மூலம் பயன்படுத்துவது போல் வழங்குகிறது பெமிலோ நிறுவனம். கூடிய விரைவில் இந்த வசதி பயன்பாட்டிற்கு வரும்.






























