உட்காந்த இடத்துல இருந்தே 'பறந்து-பறந்து' மீன் பிடிக்கலாம்..!

Posted by:

'உங்க கண்ணுக்கு எப்பிடி தெரிஞ்சா எனக்கு என்ன..?' என்று சர்வ சாதாரணமாக பாராட்டுகளையும், விமர்சனங்களையும், வசவுகளையும் ஒரு பக்கம் வாங்கி கொண்டே, மறுபக்கம் கருவிகளை கண்டுபிடித்து தள்ளிக் கொண்டேதான் இருக்கின்றனர் - தொழில்நுட்ப வல்லுநர்கள்..!

இதோ.. ஸ்மார்ட்போன்களுக்கான 7 அடுக்கு பாதுகாப்பு...!

தொழில்நுட்ப சோம்பேறித்தனத்திற்க்கும், தொழில்நுட்ப புத்திசாலித்தனத்திற்க்கும் இடையில் இருப்பது ஒரு சுவர் மட்டும்தான். அந்த சுவரின் மேல் ஏறிக் கொண்டு, இந்த பக்கம் குதித்தால் 'அடடா என்னா ஒரு கண்டுபிடிப்பு'னு தோணும், அப்பிடியே அந்த பக்கம் குதித்தால் 'இது நாட்டுக்கு இப்போ ரொம்ப அவசியமா'னு தோணும், அப்படியான கருவிகளில் ஒன்றுதான் - க்வாட்காப்டர்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இரண்டு கருவிகள் :

வாட்டர் ப்ரூஃப் க்வாட்காப்ட்டர் மற்றும் தன்னிச்சையாக இயங்கும் பிஷிங் யூனிட், ஆகிய இரண்டு கருவிகளை இணைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த கருவி..!

மீன்களை பிடிக்கும் :

இது தன் ஆளுகைக்கு உட்பட்டு, நீர் நிலைக்கு மேலே நிலையாக பறந்து சென்று மீன்களை பிடிக்கும் ட்ரோன் ஆகும்..!

சோனார் தொழில்நுட்பம் :

இதன் அடியில் பொருத்தப்பட்டு இருக்கும் மீன்களை தேடும் கருவியானது, சோனார் தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.

ஆழம் :

இதன் ரேடார் சுமார் 120 அடி ஆழத்தில் உள்ள மீனை கூட கண்டுபிடிக்க உதவுமாம்.

மீன்பிடி பொறி :

மீன்களை கண்டு பிடித்தபின் திரும்பி நம்மிடமே வரும் அதில், சோனார் கருவியை கழட்டிவிட்டு, மீன்பிடி பொறி ஒன்றை பொருத்தி மறுபடியும் அனுப்ப வேண்டும்.

மறுபடியும் :

மீனை கண்டுபிடித்த அதே இடத்திற்கு மீண்டும் சென்று, மீனை கடைசியாக பார்த்த அதே ஆழத்திற்கு மீன்பிடி பொறி போட்டு சிக்கியதும் பிடித்து வரும்.

கேமிரா :

இதில் ஒரு வாட்டர் ப்ரூஃப் எச்டி கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தொழில் முறை மீனவர்களுக்கும் :

பொழுதுபோக்கிற்காக மீன் பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, தொழில்முறை மீனவர்களுக்கும் இது உதவுமாம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Quadcopter is an autonomous fishing drone.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்