இந்தியாவிலும் வெடித்த சிதறிய ஐபோன் 6

Posted by:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 கருவி உலகம் முழுவதிலும் கடந்த ஆண்டு வெளியாகி வழக்கமான விற்பனை மற்றும் விமர்சனங்களை பெற்றது. சிலர் ஐபோன் வளைந்ததாகவும், சில இடங்களில் வெடித்த சம்பவங்களும் அரங்கேறியதை தொடர்ந்து இந்தியாவிலும் ஐபோன் 6 ஒன்று வெடித்திருக்கின்றது.

ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

 இந்தியாவிலும் வெடித்த சிதறிய ஐபோன் 6

இந்தியாவின் குர்ஜான் பகுதியை சேர்ந்த கிஷன் யாதவ் என்பவரின் ஐபோன் 6 வாங்கிய இரண்டே நாட்களில் வெடித்து சிதறியதாக தெரிவித்திருக்கிறார். போனினை ஹெட்போனில் பயன்படுத்தியதால் சிறிய காயங்களுடன் தப்பியதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் வெளியானதை தொடர்ந்து இது போன்ற சம்பவம் இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!

ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் இந்தியாவில் ஐபோன் 6 வெடித்திருப்பது இது தான் முதல் முறை என்று தெரிவித்திருக்கின்றார். ஜூன் மாதம் 20 நடைபெற்ற இந்த சம்பவம் காவல் துறையில் முறையிட்ட பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவிலும் வெடித்த சிதறிய ஐபோன் 6

ஜூன் மாதம் 18 ஆம் தேதி கிஷன் ரூ.60,000 கொடுத்து 64 ஜிபி ஐபோன் 6 கருவியை வாங்கியிருக்கின்றார், சம்பவத்தன்று தனது நண்பருடன் அழைப்பில் இருந்த போது திடீரென ஐபோன் சூடாகியிருக்கின்றது, உடனே உஷாரான கிஷன் ஐபோனினை வெளியே போட்டுள்ளார், போட்டவுடன் ஐபோன் வெடித்ததாக அவர் கூறுகின்றார். மேலும் போன் வெடிக்கும் போது போன் அழைப்பில் இருந்ததோடு 70 சதவீதம் பேட்டரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
An iPhone 6 user in Gurgaon has alleged that his two-day old handset heated up and exploded during a call.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்