ஜிமெயில் : எளிய தந்திரங்கள்.!!

Written by: Aruna Saravanan

கூகுள் நிறுவனம் இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றத்தை இலவசமாக செய்து கொள்ள துவங்கிய சேவை தான் ஜிமெயில். இது அனைவருக்கும் தெரியும் ஆனால் ஜிமெயில் மூலம் மின்னஞ்சல், தகவல் தொடர்புகளை எளிமையாக மேற்கொள்ள பல வழிகள் இருக்கின்றது, அவைகளில் உங்களுக்கு தெரியாத ஐந்து எளிய தந்திரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வார்த்தை

மொபைல் ஆப்பில் இருந்து மெயில் செய்யும் போது டெக்ஸ்ட் அமைப்பு கடினமானது - போல்ட், இட்டாலிக், கீழே கோடு கிழிப்பது அல்லது எடுத்துக்காட்டுவது என சில கடினமாக இருந்தது. ஆனால் இப்பொழுது கூகுள் அதற்கு சிறந்த டெக்ஸ்ட் சப்போர்ட் அளித்துள்ளது. உங்களுக்கு எது முக்கியமோ அதை நீங்கள் ஹைலைட் செய்து கொள்ள முடியும்.

கூகுள் கேலெண்டர்

மொபைல் ஆப்பில் கூகுள் கேலெண்டர் மற்றும் பத்திரிக்கைகளை பரிமாற்றம் செய்து கொள்ள ஈஸியான வழிகள் வந்துள்ளன. இதன் மூலம் உங்கள் அலுவல்களை பகுத்து வைத்து கொள்ளவும் முடியும். ஒரே தட்டில் இன்று உங்களுக்கு என்ன அலுவல் இருக்கின்றது என்பதை இது காட்டிவிடும்.

Rich Text Formatting

நீங்கள் ஜி மெயில் மட்டுமல்லாது மற்ற மெயில்களுக்கு பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் நிகழ்த்த கூகுள் வழி செய்கின்றது. அதுதான் Gmalify. 2015ஆம் ஆண்டில் இருந்து ஜி மெயில் ஆண்ட்ராய்ட் செயலி மற்ற மெயில்களுக்கு பரிமாற்றம் செய்ய உதவி புரிந்து வருகின்றது. இதில் ஸ்பேம், இன்பாக்ஸ் அமைப்பு, கூகுள் அட்டைகள் போன்றவை அடங்கும். தற்பொழுது இது யாஹூ, மைக்ரோசாஃப்ட் ஹாட்மெயில் / அவுட்லுக் கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அனைத்து மெயில் சேவைகளுக்கும் வழங்கப்படலாம்.

என்க்ரிப்ஷன்

TLS தரவுமறையாக்கத்திற்கு ஜி மெயில் உதவி புரிகின்றது. இது இன்கம்மிங் மற்றும் அவுட் கோயிங் மெஸேஜ்களுக்கு அடங்கும். அனுப்புவோரின் இமெயில் விலாசத்தை TLS Encryption சப்போர்ட் செய்யவில்லை என்றால் ஜி மெயில் பயன்பாட்டாளர்களுக்கு மெசேஜில் உடைந்த ஐகானை காட்டும்.

பாதுகாப்பு

ஜி மெயில் தற்பொழுது அதிர்காரபூர்வமற்ற மெசேஜை சுட்டி காட்டுகின்றது. அதற்கு அனுப்புவோரின் சுயவிவர புகைப்படம், லோகோ போன்றவற்றிற்கு பதில் ஒரு கேள்வி குறியை காட்டுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க சதமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
new features you may not know about Gmail Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்