அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ஒன் ப்ளஸ் 2 கருவி வெளியாகி விட்டது. புதிய ஒன் பளஸ் 2 ரூ.24,999க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு இந்த கருவி உண்மையில் சிறந்ததது தானா, என்ற கேள்வி அனைவருக்கும் இருக்க தான் செய்யும்..
இந்த கேள்விகளுக்கான பதில் அளிக்கும் படி இந்த தொகுப்பு அமையும். புதிய ஸ்மார்ட்போன் முந்தைய கருவி போன்று இருக்குமா, நம்பி வாங்கலாமா என கடுமையான குழப்பத்தில் இருப்பவர்கள் கீழ் வரும் ஸ்லைடர்களை பார்த்து வாங்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள்..
கைரேகை ஸ்கேனர்
ஒன் ப்ளஸ் 2 கருவியில் வழங்கப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனரில் அதிகபட்சம் 5 கைரேகைகளை பதிவு செய்து கொள்ள முடியும், மேலும் இது ஆப்பிள் நிறுவனத்தின் டச் ஐடியை விட வேகமாக இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கிரீன்
முந்தைய மாடலில் இருக்கும் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை வழங்கப்பட்டிருந்தாலும் புதிய மாடலில் ஸ்கிரீன் அதிக பிராகசமாகவே இருக்கின்றது.
பிராசஸர் , ரேம்
64 பிட் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
யுஎஸ்பி கனெக்டர்
யுஎஸ்பி டைப் சி கனெக்டர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஒன் ப்ளஸ் 2 என்பதோடு இந்த கனெக்டர் கூகுளின் ஆண்ட்ராய்டு எம் இயங்குதளம் உட்பட அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் பொதுவானதாகவும் இருக்கும்.
மெட்டல் ஃப்ரேம்
முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது ஒன் ப்ளஸ் 2 வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய கருவி சிறிதளவு தட்டையாகவும், கனமாகவும் இருப்பதோடு மக்னீஷியம் அல்லாய் ஃப்ரேம் கொண்டிருக்கின்றது.
கேமரா
ஒன் ப்ளஸ் ஒன் மற்றும் ஒன் ப்ளஸ் 2 என இரு கருவிகளும் 13 எம்பி ப்ரைமரி கேமரா டூயல் எல்ஈடி ப்ளாஷ் கொண்டிருப்பதோடு புதிய மாடலில் 1.3 மைக்ரான் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் ஓஎஸ்
ஒன் ப்ளஸ் 2 கருவியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் வழங்கப்பட்டிருப்பதோடு மற்ற கருவிகளில் இல்லாத அம்சங்கள் வழங்கப்படும்.
பேட்டரி
3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் இந்த கருவி முந்தைய மாடலை விட அதிக நேரம் பேக்கப் வழங்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.
டூயல் சிம்
முந்தைய மாடலில் சிங்கிள் சிம் ஸ்லாட் வழங்கிய ஒன் ப்ளஸ் நிறுவனம் இம்முறை இரு சிம் கார்டுகள் பொருந்தும் ஸ்லாட்களை வழங்கி இருக்கின்றது.
கவர்
சான்ட்ஸ்டோன் ஃபினிஷ் கொண்ட பின் புறம் இருந்தாலும் பிரத்யேகமாக பாம்பூ, கெவ்லர், ப்ளாக் ஆப்ரிகாட் மற்றும் ரோஸ்வுட் என பல பேக் கவர்கள் வழங்கப்பட்டுள்ளது.