நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன, ஏன் அதை ஆதரிக்க வேண்டும்

By Meganathan
|

கடந்த சில தினங்களாக அதிகளவில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை 'நெட் நியூட்ராலிட்டி' . இதன் அர்த்தமானது, இன்டர்நெட் ப்ரோவைடர்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து இன்டர்நெட் சேவை மற்றும் ஆப்ஸ்களையும் சமமாக வழங்க வேண்டும் என்பதாகும்.

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன, ஏன் அதை ஆதரிக்க வேண்டும்


தற்சமயம் வரை நாம் அனைவரும் இன்டர்நெட் வசதியை சீரான வழிகாட்டுதலில் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் டிராய் இதில் சில மாற்றங்களை கொண்டு வர யோசனை செய்வதாக தெரிகின்றது.

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன, அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது போன்ற தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன
நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் சமமான முறையில் வழங்குவதே ஆகும். உதாரணமாக ப்ளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்கும் போதும் யூட்யூபில் வீடியோ பார்க்கும் போது இரு தளங்களும் சமமான வேகத்தில் இயங்க வேண்டும். இதனால் மற்ற நெட்வர்க் ப்ரோவைடர்கள் நீங்கள் பயன்படுத்தும் இணைத்தை ப்ளாக் செய்ய இயலாது.

திறந்தவெளி இன்டர்நெட்
இன்ந்டர்நெட் சர்வீஸ் ப்ரோவைடர்கள் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் சமமான வேகத்தினை வழங்க வேண்டும். இன்டர்நெட் சர்வீஸ் ப்ரோவைடர்கள் தாங்களாக எந்த ஒரு இணையத்தையும் ப்ளாக் செய்ய கூடாது.

ஏர்டெல் ஜீரோ மற்றும் நெட் நியூட்ராலிட்டி
ஏர்டெல் ஜீரோ ப்ளாட்ஃபார்ம் மூலம் வாடிக்கையாளர்கள் எக்கச்சக்க மொபைல் ஆப்ஸ்களை இலவசமாக பயன்படுத்த முடியும். இதற்கான தொகையை ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் செலுத்தும். எடுத்துக்காட்டாக ஸ்னாப்டீல் ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் சேர்ந்தால் ஸ்னாப்டீல் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக ஏர்டெல் ஸ்னாப்டீல் நிறுவனத்திடம் பணத்தை வசூலித்து கொள்ளும்.

இந்த திட்டத்திற்கு டிராய் அனுமதி அளித்தால் இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு அடியோடு பாதிக்கப்படும்.

சீரான இன்டர்நெட் சேவையை அனுபவிக்க நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Net Neutrality What You Need To Know and Why You Should Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X