பூமியை காப்பாற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் !

Written By:

அனுதினமும் ஒரு விண்கல்லோ அல்லது சிறுகோளோ பூமியை நோக்கி மெல்ல மெல்ல நெருங்கி வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக பார்த்தால், இந்த நொடி தொடங்கி பூமியின் கடைசி நாள் வரையிலாக இன்னும் லட்சக்கணக்கான சிறுகோள்கள் மோதல் நிகழ்த்த அல்லது மிக நெருக்கத்தில் கடந்து செல்ல காத்திருக்கின்றன.

ஆனால் இப்போதைக்கு, அது சார்ந்த கவலையோ பீதியோ அடைய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் மாபெரும் விண்கற்கள் விழுந்ததால் அழிந்த டைனோஸர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. இது அதிநவீன தொழில்நுட்ப யுகம், இருப்பினும் அதிலும் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அகச்சிவப்பு தொலைநோக்கி :

நியோகேம் (NEOcam) அதாவது நியர் எர்த் ஆப்ஜெக்ட் கேமிரா (Near-Earth Object Camera) என்பது விண்வெளி சார்ந்த அகச்சிவப்பு தொலைநோக்கி (Infrared telescope) ஆகும்.

பணி :

விண்ணில் செலுத்தப்படும் நியோகேம் ஆனது சிறுகோள் மற்றும் வால்மீன் கண்டறிதல் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய பணிகளை செய்யும் முக்கியமாக பூமியை நெருங்கும் சிறுகோள் மற்றும் வால்மீன்களை ஆராயும்.

கண்டுப்பிடிக்க உதவும் :

சாதாரண தொலைநோக்கிகளுடன் ஒப்பிடும் போது நியோகேம் ஆனது 10 மடங்கு அதிக அளவிலான சிறுகோள் மற்றும் வால்மீன்களையும் கண்டுப்பிடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது

தாமதம் :

விண்வெளி நிறுவனங்களுக்கு தேவையான அளவு நிதி கிடைக்காத பட்சத்தில் நியோகேமை நிறுவல் என்பது தாமதமாகிக்கொண்டே போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விபரீதம் :

இன்னும் லட்சக்கணக்கான சிறு கோள்கள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டிய நிலுவையில் இருக்க நியோகேம் நிறுவல் தாமதமாகிக்கொண்டே போவது விபரீதமான ஒன்றாகும்.

காலக்கெடு :

தற்போதைய நிலைப்படி நாசாவால் கிடைக்கப் பெற்ற காலக்கெடுக்குள் நியோகேம் தனை நிறுவ இயலாது என்று தெரிகிறது.

5 விண்வெளி திட்டம் :

நிதிக்காக போட்டியிடும் நாசாவின் 5 விண்வெளி திட்டங்களில் இதுவும் ஒன்று என்பதும், இத்திட்டங்கள் 2020-க்குள் முடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகள் :

வீனஸ் கிரகம், பூமியை நெருங்கியுள்ள விண்வெளி பொருட்கள் மற்றும் சிறுகோள்கள் பற்றிய ஆய்வுகள் சார்ந்ததே நிதிகக்காக போட்டியிடும் 5 நாசாவின் விண்வெளி திட்டங்கள் ஆகும்.

3 மில்லியன் நிதி :

ஒவ்வொரு ஆய்வுக்குழுவிற்கும் சுமார் 3 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டு எந்தெந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்பது செப்டம்பர் 2016-ஆம் ஆண்டு வாக்கில் முடிவு செய்யப்படும்.

500 பில்லியன் :

நியோகேம் திட்டம் என்பதே சுமார் அரை பில்லியனை தாண்டும் என்பதால் இதை சாத்தியப்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆதரவு :

அதே சமயம் இந்த ஸ்பேஸ் தொலைநோக்கியானது இன்னும் பல மில்லியன் விண்மீன்கள் கண்டுபிடிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு பெருமளவில் உதவும் என்ற ஆதரவும் பெருகுகிறது.

சூரிய குடும்பத்தின் வரலாறு :

இவ்வகை தொலைநோக்கியானது நமது சூரிய குடும்பத்தின் வரலாற்றை மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள உதவுவதோடு சேர்த்து வருங்காலத்தில் ஆய்வுகள் நிகழ்த்த புதிய விண்வெளி பகுதிகளையும் கண்டுப்பிடிக்க உதவும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயல்பாடு :

பூமியின் சுற்று வட்டப்பாதையுள் நிறுவப்படும் நியோகேம் ஆனது அபாயத்திற்கு உரிய விண்பொருட்களை கண்டறியும் அதோடு சேர்த்து அந்த விண்பொருளின் கலவை, வடிவங்கள், சுழற்சி நிலை, மற்றும் வட்டப் பாதை ஆகியவைகளை கண்டறியும்.

கேள்விக்குறி :

நீயோகேம்க்கு பெருவாரியான ஆதரவும் நிதியும் கிடைக்கப்பெற்று விண்ணில் செலுத்தப்பட்டு பூமி கிரகத்திற்கு வரவிருக்கும் ஆபத்துக்கள் எல்லாம் முன்கூட்டியே கணிக்கப்பட்டு தவிர்க்கப்படுமா என்பதெல்லாம் கேள்விக்குறி தான்..!!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படங்கள் : நாசா

English summary
NEOCam - The infrared space telescope that could save Earth. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்