Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மொபைல் நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்!

Updated: Tuesday, March 26, 2013, 9:26 [IST]

nearly 45 89 million subscribers opted mnp trai

மொபைல் எண்ணை மாற்றாமல், தொலைதொடர்பு நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் சேவையை பெறுவதற்காக கடந்த ஏப்ரல் வரை 4 கோடியே 58 லட்சம் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலை தொடர்பு ஆணையம் (ட்ராய்) தெரிவித்திருக்கிறது.

மொபைல் எண்ணை மாற்றாமல், சேவையை மாற்றும் இந்த வசதிக்கு விண்ணப்பம் அளித்துள்ள பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடத்தில் 51 லட்சம் வாடிக்கையாளர்களும், ஆந்திராவில் 44 லட்சம் விண்ணப்பங்களையும் மற்றும் குஜராத்தில் 42 லட்சம் விண்ணப்பங்களையும் பெற்றுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்திருக்கிறது.

சமீபமாகவே தொலை தொடர்பு சேவை பற்றியும், அலைகற்றைகளின் விலை உயர்வு பற்றியும் பல விதமான தகவல்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.

ஏர்டெல், வோடாபோன், ஏர்செல் போன்ற பல சேவைகள் நிறைய சலுகைகளையும், விலை குறைப்பினையும் கொடுத்து கொண்டே தான் வருகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சேவையின் பயன்பாடுகள் திருப்தி அளிக்காமல் போவதால், சேவையினை மாற்ற விருபம்புகின்றனர்.

இதுபோன்று, மொபைல் நம்பரை மாற்றாமல், சேவையை மட்டும் மாற்றி கொள்ள மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்கு (எம்என்பி), விண்ணப்பம் அளித்து மாற்றிக் கொள்ளலாம்.

Story first published:  Thursday, June 28, 2012, 12:21 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll