நீரை சேமிக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு, அசத்தும் 12 வயது சிறுமி.!!

Written By:

தண்ணீரின் மகத்துவம் அனைவரும் அறிந்திருந்தாலும், எத்தனை பேர் அதனினை அளவாக பயன்படுத்துகின்றோம். இருக்கும் போது பயன்படுத்தலாம் என எக்கச்சக்கமாக தண்ணீரை செலவழிப்போருக்கு மத்தியில் இருக்கும் போதே நீரை சேமிக்க வேண்டும் என்கிறார் நாசிக் நகரை சேர்ந்த 12 வயது சிறுமி.

நீரை சேமிக்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.!!

இதோடு இல்லாமல் தண்ணீர் பயன்பாட்டை சுமார் 80 சதவீதம் வரை சேமிக்க வழி செய்யும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்திருக்கின்றார் நாசிக் ரச்னா வித்யாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் ஷ்ருஷ்டி நெர்கர். இவர் கண்டுபிடித்திருக்கும் ஸ்மார்ட் ஷவர் தொழில்நுட்பத்தின் மூலம் சுமார் 17 லட்சம் பேருக்கு தொடர்ச்சியாக 34 நாட்களுக்கு வழங்க முடியும் என நெர்கர் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கண்டுபிடிப்பு அந்த மாவட்டத்தின் ஆட்சியர் டிபெந்தர் சிங் குஷ்வாஹ் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கார் கழுவும் மையத்திற்கு சென்று வந்த பின் இந்த திட்டத்திற்கான பணியை துவங்கிய நெர்கர் ஐந்தாவது முயற்சியில் வெற்றி கண்டதாக தெரிவித்திருக்கின்றார். மேலும் இந்த வடிவமைப்பு மின்சார வயர் பைப் மற்றும் பிவிசி பைப்களை கொண்டு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Nasik teenager invents smart shower solutions to save water. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்