துருவங்கள் தலைகீழாக மாறும், பேரழிவு விளையும் - நாசா எச்சரிக்கை..!

Posted by:

சமீபத்தில் சூரிய காற்றால் செவ்வாய் கிரகத்தின் வளமைகள் முற்றிலுமாக அழிந்து போன தகவலை நாசா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தகவலில் செவ்வாய் கிரகத்தை போன்றே பூமி கிரகமும் அழிந்து போகாமல் பாதுகாப்பது பூமியின் காந்த புலம் (Magnetic Field) தான் என்று நாசா விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

கெட்ட செய்தி : செவ்வாய் கிரகத்தை 'காலி' செய்த சூரிய காற்று..!

ஆனால், சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகின் காந்த புலம் பற்றியும், உலகின் துருவங்கள் பற்றியும் அதிர்ச்சிகாரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது நாசா.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பலவீனம் :

நாசாவின் ஆய்வுப்படி உலகின் காந்த புலம் (Magnetic Field) பலவீனம் அடைந்து கொண்டே வருவது உறுதியாகியுள்ளது.

தலைகீழாக மாறும் ஆபாயம் :

மேலும், இந்த பலவீனம் மூலம் உலகின் துருவங்கள் (அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள்) தலைகீழாக மாறும் ஆபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரிததுள்ளது.

எடுத்துக்காட்டு :

அதாவது காம்பஸ்கள் தலைகீழாக செயல்படும், எடுத்துக்காட்டுக்கு காம்பஸ்கள் வடக்கு திசையை காட்டுவதற்கு பதிலாக தெற்கு திசையை காட்டும்.

பேரழிவு :

மேலும் தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியண்டர்தால் :

குறிப்பிட்ட சில ஆய்வாளர்கள் தலைகீழாக மாறும் துருவங்கள் விபரீதமான சம்பவம் தான் பேரழிவை ஏற்படுத்தி நியண்டர்தால் (Neanderthal) மனித இனத்தையே அழித்தது என்ற தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆதாரங்கள் :

நாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் பலவீனம் அடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

160 வருடம் :

திரட்டப்பட்ட ஆதாரங்கள் மூலம் பூமியின் காந்த புலம் கடந்த 160 வருடங்களாக பலவீனம் அடைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகளில் நடக்கும் :

காந்த புலம் சமப்படுத்துதல் மற்றும் காந்த முனைகள் தலைகீழாக புரட்டப்படும் சம்பவமானது, இன்னும் 1000 ஆண்டுகளில் நடக்கும், முக்கியமாக அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நடக்கும் என்று நாசா கணித்துள்ளது.

மறுசீரமைப்பு :

காந்த புலத்தின் பலவீனம் ஆனது பூமியின் திரவ வெளி மையத்தில் உள்ள இரும்பு அணுக்களை மறுசீரமைப்பு செய்யும் அதன் விளைவாக துருவங்கள் மாறும்.

மெல்ல மெல்ல :

மேலும் சில ஆய்வாளர்களின் ஆய்வின்படி உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக புரட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.

200 ஆண்டுகள் :

அது மட்டுமின்றி உலக துருவாங்கள் தலைகீழாக மாறிய அடுத்த 200 ஆண்டுகளுக்கு பூமிக்கு காந்த புலமே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு :

வளிமண்டலத்தில் கடந்து சூரிய கதிர்களிடம் இருந்து பூமியை காப்பாற்றுவதே காந்தபுலம் தான், அது பலவீனம் அடைந்தால் பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகும்.

தீங்கு :

அப்படியாக சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு, சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்க நேரிடும்.

இடையூறு :

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களை நேரடியாக பெறுவத்தின் மூலம் தோல் புற்றுநோய் மற்றும் ஆற்றல் மற்றும் தொடர்புத் இடையூறு ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை :

சுமார் 780,000 ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்து தான் பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது என்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பனியுகம் :

மேலும் 41,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் (Ice Age) நடந்த இதே போன்ற சம்பவம் தான் நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
உலகின் காந்த புலம் பலவீனம் அடைகிறது, துருவங்கள் மாற இருக்கிறது - நாசா. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்