எக்ஸ்-ப்ளேன்ஸ் : மீண்டும் 'அக்னி பரீட்சை' நடத்தும் நாசா..!

|

எக்ஸ்-ப்ளேன்ஸ், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றியக்கவியல் கருத்துப்படிவம் கொண்டு உருவாக்கப்படும் அமெரிக்கா வானூர்தி மற்றும் ராக்கெட்டுகள் ஆகும். இவ்வாறாக உருவாக்கம் பெறும் எக்ஸ்-ப்ளேன்கள் பெரும்பாலும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) அல்லது வானூர்திகளான தேசிய ஆலோசனை குழுதான் (National Advisory Committee for Aeronautics - NACA) சோதனை ஓட்டம் செய்யும்.

எக்ஸ்-1 முதல் எக்ஸ்-56 வரையிலாக பல வகையான எக்ஸ்-ப்ளேன்கள் 1940-களில் இருந்தே உருவாக்கம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. நாசாவின் இந்த எக்ஸ்-ப்ளேன்கள் மிக நீண்ட காலமாக நிகழும் திட்டம், என்பதுடன் சேர்த்து இவைகள் மிகவும் ஆபத்தான ஒரு திட்டமும் கூட என்பதும் குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி :

உற்பத்தி :

வடிவமைக்கப்பட்ட பெரும்பாலான எக்ஸ்-ப்ளேன்கள் முழு அளவிலான உற்பத்திக்கு கொண்டு செல்லப்படவில்லை.

விபத்து - தோல்வி :

விபத்து - தோல்வி :

அதுமட்டுமின்றி உருவாக்கம் பெற்ற எக்ஸ்-ப்ளேன்களில் சில விபத்துக்குள்ளாகின, முற்றிலுமாக அழிந்து தோல்வியில் முடிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய வரிசை :

புதிய வரிசை :

தற்போது மீண்டும் நாசா, புதிய வரிசையிலான எக்ஸ்-ப்ளேன் வகை சோதனை விமானத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கிரீன் ஏவியஷன் :

கிரீன் ஏவியஷன் :

இந்தமுறை கிரீன் ஏவியஷன் டெக்னாலஜி அதாவது பசுமை விமான போக்குவரத்து தொழில்நுட்பம் (Green Aviation Technology) பயன்படுத்தி எக்ஸ்-ப்ளேன்கள் உருவாக்கப்பட இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

திறன் :

திறன் :

ஆரம்ப காலத்தில், ஒவ்வொரு எக்ஸ்-ப்ளேன்களும் ஒவ்வொரு வகையான குறிப்பிட்ட திறன் கொண்டதாய் உருவாக்கப்பட்டன.

சவுண்ட் பேரியர் :

சவுண்ட் பேரியர் :

அதாவது, பெரிய அளவிலான சப்தம் எழுப்பாமல், மிகவும் அமைதியான முறையில் செயல்படும் சவுண்ட் பேரியர் (Sound barrier) திறன்.

நிலை:

நிலை:

செங்குத்தாக இருந்த நிலையில் டேக்-ஆப் செய்தல் மற்றும் தரை இறங்கும் திறன்.

உந்துவிசை :

உந்துவிசை :

அணுசக்தி மூலம் உந்துவிசை பெறும் திறன் கொண்டவைகள் என எக்ஸ் ப்ளேன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறன் கொண்டவைகளாக உருவாக்கம் பெற்றன.

எரிபொருள் செலவில் :

எரிபொருள் செலவில் :

தற்போது உருவாக்கம் பெறும் எக்ஸ்-ப்ளேன்கள் குறைந்த அளவிலான எரிபொருள் செலவில் பறக்கும் படியாகவும், குறைந்த அளவிலான சப்தம் மாற்றும் மாசு உண்டாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட இருக்கிறது.

நியூ ஹாரிசான்ஸ் ஏவியேஷேன் :

நியூ ஹாரிசான்ஸ் ஏவியேஷேன் :

இந்த புதிய திட்டத்திற்கு 'நியூ ஹாரிசான்ஸ் ஏவியேஷேன்' (New Harizons Aviation) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் முடிக்கப்பெற்று எக்ஸ்-ப்ளேன்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமெரிக்காவின் 'மூன் லேண்டிங்' போலியானது : சீனாவின் வலிமையான ஆதாரம்..!


குட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.!!


இந்த 14 இந்தியர்களில், 6 பேரையாவது உங்களுக்கு தெரியுமா...!?

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
NASA is bringing back one of its most experimental and dangerous programs. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X