சபாஷ் : நாசவின் 'வாயை பிளக்க' வைத்த இந்தியர்..!

Written By:

ஆம். சைக்கிள் கேரியரில் ராக்கெட் பாங்கங்களை வைத்து கொண்டு சென்றுதான் நாம் விண்வெளியை அடைந்தோம். அது தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் ஆரம்ப வளர்ச்சி கால வரலாறும் கூட..!

இருப்பினும் இன்று, செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை தான் பல உலக நாடுகளும் (அமெரிக்கா உட்பட) நாடுகின்றன என்பது தான் விண்வெளி துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சிக்கு சான்று. அந்த வளர்ச்சி நிலையை மேலும் தூக்கி நிறுத்தும் மற்றொரு தூண் தான் - அபாஸ் மித்ரா..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நாசா ஆய்வு :

பிளாக் எனப்படும் கருங்குழி பற்றி நாசா சமீபத்தில் ஆய்வு ஒன்றை நிகழ்த்தி இருந்தது.

எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு :

பிளாக் ஹோல்களில் இருந்து வெளியேறும் மாபெரும் எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு பற்றியது தான் அந்த ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்பாடு :

நாசாவின் இந்த சமீபத்திய ஆய்வில் இருந்து பிளாக் ஹோல் சார்ந்த தனது கோட்பாடு நிரூபனம் ஆகியுள்ளது என்று கருத்துக் கூறியுள்ளார் இந்தியாவை சேர்ந்த வான் இயற்பியலாளரான அபாஸ் மித்ரா.

தீப்பந்துகள் :

பிளாக் ஹோல் அதாவது கருங்குழி நாம் நினைப்பது போல் 'நிஜமில்லை', கருங்குழி என்பது மிகவும் சூடான தீப்பந்துகள் (ultra hot balls of fire) போன்றது தான் என்கிறது மித்ராவின் கோட்பாடு.

பிளாக் ஹோல் :

அதாவது, மிகவும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (extremely massive stars) தீவிரமான சிறிய பொருட்களுடன் (ultra compact objects) சரிந்து போகும் நிலையே (collapse) பிளாக் ஹோல் என்கிறது மித்ராவின் கோட்பாடு.

ஈர்ப்பு மண்டலம் :

அப்படியான பிளாக் ஹோலின் ஈர்ப்பு மண்டலமானது உட்புகும் ஒளி கூட மீண்டு வெளியேற முடியாத வண்ணம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

கற்பனை எல்லை :

வெளியேற முடியாத அந்த கற்பனை எல்லையை விஞ்ஞானிகள் நிகழ்வெல்லை (event horizon) என்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வெல்லை :

அதாவது உள்நடக்கும் நிகழ்வுகள் எதுவும் வெளியிலிருந்து பார்க்கும் எவரையும் பாதிக்காது, மற்றும் உட்புகுந்த எதுவும் மீண்டும் வராது என்பதே நிகழ்வெல்லையாகும்.

பதிவு :

கடந்த மாதம் சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல் ஒன்றில் நடந்த எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு சம்பவத்தை நாசா பதிவு செய்திருந்தது.

விண்வெளி ஆய்வு தொலைநோக்கி :

அந்த சம்பவத்தை நாசாவின் இரண்டு விண்வெளி ஆய்வு தொலைநோக்கிகள் பதிவு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி :

இதுவரை பிளாக் ஹோலில் இருந்து எதுவுமே வெளிவராது என்று நம்பப்பட்ட நிலையில் எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு மட்டும் எப்படி வெளியானது.

நிரூபனம் :

இதன் மூலம் வான்வெளி இயற்பியலாளரான அபாஸ் மித்ராவின் பிளாக் ஹோல் சார்ந்த கோட்பாடு நிரூபனமாகி உள்ளது.

சூடான பந்து :

அதாவது அவர் கோட்பாடின்படி பிளாக் ஹோல் என்பது காந்த பிளாஸ்மாக்களை (magnetized plasma) உள்ளடக்கிய சூடான பந்துகள் தான்.

அயனியாக்கம் :

காந்த பிளாஸ்மா என்பது எலக்ட்ரான்கள் பறிக்கப்பட்ட அயனியாக்கம் எரிவாயு (ionized gas stripped of electrons) என்பது குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டீன் :

மேலும் பிளாக் ஹோல் என்ற கருத்துப்படிவத்தை முதன்முதலில் கணித்தவர் ஆல்பார்ட் ஐன்ஸ்டீன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து :

இருப்பினும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது போல இது கருங்குழி இல்லை, இது தீ பந்துகளில் முடிவடையும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (MECO- Magnetospheric Eternally Collapsing Objects) என்ற கருத்தை அபாஸ் மித்ரா முன்வைக்கிறார்.

தலைவர் மற்றும் இணை பேராசிரியர் :

அபாஸ் மித்ரா, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC)) வான்வெளி இயற்பியல் கோட்பாடு தலைவர் மற்றும் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் இணை பேராசிரியர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
NASA finding bolsters Indian theory on black hole. Read more about this is Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்