விண்வெளி வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை..!

|

பெரிய அளவிலான விண்மீன்கள் அல்லது நட்சத்திரங்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின், மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிக்கும் நிலையை தான் 'சூப்பர்நோவா' (SuperNova) எனப்படும் (இதை தமிழில் மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்பர்).

இந்த சூப்பர்நோவா வெடிப்பு சம்பவம் நிகழும் போது அது மூர்கத்தனமான ஒரு ஆற்றலை வெளிக்கிடும் என்பதும், அந்த ஆற்றல் ஆனது சூரியனைக் காட்டிலும் 130,000,000 மடங்கு அதிக பிரகாசத்தை வெளிக்கிடும் என்பதும் தான் விண்வெளி அறிவியலில் விளக்கம் இருக்கிறதே தவிர சூப்பர்நோவா வெடிப்பு சம்பவம் ஆனது ஒருமுறை கூட பதிவு செய்யப்பட்டதே இல்லை. அந்த குறையானது இப்போது தீர்ந்துவிட்டது..!

மூர்கத்தனமான ஆற்றல் :

மூர்கத்தனமான ஆற்றல் :

எப்போது நிகழும் என்று அறியப்படாத சூப்பர்நோவா வெடிப்பில் இருந்து வெளியாகும் மூர்கத்தனமான ஆற்றலை 'ஷாக்வேவ் பிரேக்அவுட் ' (Shockwave Breakout) என்கிறார்கள்.

500 சூரியன்  :

500 சூரியன் :

வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் சூப்பர்நோவா வெடிப்பானது சுமார் 500 சூரியனின் அளவிற்கு அடர்த்தியானதாக இருக்கும் என்பதும் குறிபிடத்தக்கது.

பதிவு :

பதிவு :

இப்படியான நிகழ்வை பதிவு செய்ய மிகுந்த சிரமம் என்ற நிலையில் முதன் முதலாக நட்சத்திரம் ஒன்றின சூப்பர்நோவா வெடிப்பை பதிவு செய்துள்ளது நாசா.

 1.2 பில்லியன் ஒளியாண்டுகள் :

1.2 பில்லியன் ஒளியாண்டுகள் :

பூமி கிரகத்தில் இருந்து சுமார் 1.2 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கேஎஸ்என் 2011டி (KSN 2011d) என்ற நட்சத்திரத்தின் வெடிப்பை தான் நாசா தற்போது பதிவு செய்துள்ளது.

கெப்ளர் :

கெப்ளர் :

இந்த பதிவை நிகழ்த்தியது நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்க்கோப் (Kepler space telescope) என்பதும் குறிபிடத்தக்கது.

விண்வெளித் தொலைநோக்கி :

விண்வெளித் தொலைநோக்கி :

கெப்ளர் என்பது பூமியைப் போன்ற வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களை ஆராய்வதற்கென நாசாவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி விண்கலமாகும் என்பது குறிபிடத்தக்கது.

அனிமேஷன் வீடியோ :

அனிமேஷன் வீடியோ :

பதிவாக்கப்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அனிமேஷன் வீடியோவைத்தான் நாசா வெளியிட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

4.5 பில்லியன் ஆண்டுகளாய் 'புதையுண்டு கிடந்த' பூமி கிரக ரகசியம்.!


நாசா வீடியோவில் சிக்கிய மர்மமான பறக்கும் பொருள் ஏலியன் விண்கலமா.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
NASA Captures the Crazy Shockwave of an Exploding Star. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X