டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நரேந்திர மோடி

By Meganathan
|

டுவிட்டர் சமூக வலைதளத்தில் அதிகம் பேர் பின்பற்றும் தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றார். வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிகம் பேர் பின்பற்றும் வெளியுறவு அமைச்சராக இருக்கின்றார்.

டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன

IANS மூலம் டுவிப்லோமஸி 2015 என்ற ஆய்வில் அதிகம் பேர் பின்பற்றும் வெளியுறவு துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வாராஜ் 2,438,228 ஃபாளோவர்களை டுவிட்டரில் கொண்டிருக்கின்றார். இதற்கு அடுத்த படியாக ஐக்கிய அரபு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா பின் சையது 1,608,831 ஃபாளோவர்களையும், துருக்கி நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் மெவ்லுத் கொசக்ளூ 376,429 ஃபாளோவர்களை கொண்டுள்ளார்.

டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன

மேலும் இந்த ஆய்வில் மார்ச் 24 ஆம் தேதி வரை உலக அளவிலான தலைவர்களின் சமூக வலைதள தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அவர்கள் எந்தளவு சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்தனர் என்பது போன்ற தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டன.

டுவிட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து மூன

இந்த ஆய்வில் உலகம் முழுவதிலும் அதிகம் பேர் பின்பற்றப்பட்ட தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 56,933,515 ஃபாளோவர்களை கொண்டு முதலிடத்தில் இருக்கின்றார், இவரை தொடர்ந்து போப் பிரான்சிஸ் 19,580,910 ஃபாளோவர்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 10,902,510 ஃபாளோவர்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றார்.

Best Mobiles in India

English summary
Indian Prime Minister Narendra Modi remains the third most followed world leader on the micro-blogging site Twitter.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X