இன்டர்நெட் வைரல் : மேகத்தின் மேல் நடக்கும் 'மர்ம உருவம்'..!

Written By:

ஒரு அசாதாரணமான சம்பவம் உலகின் எந்த முக்கோடியில் நடக்கிறது என்பதெல்லாம் முக்கியமில்லை அடுத்த அரை மணி நேரத்தில் அது வைரால் ஆகிவிடும், அதுதான் இன்டர்நெட்டின் சக்தி..!

அப்படியாக, விமான பயணி ஒருவர் சுமார் 30000 அடி உயரத்தில் எடுத்த மிகவும் அசாதாரணமான புகைப்படம் ஒன்று தான் தற்போதைய இன்டர்நெட் வைரல் ஆகும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வினோதம் :

லண்டனின் கட்விக் விமான நிலையத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் பயணித்த நிக் ஓ'டொநாஹ்யூ (Nick O'Donoghue) என்பவர் மேகத்தின் மேல வினோதமான உருவம் புலப்படுவதை கண்டுள்ளார்.

புகைப்படம் :

உடனே நிக் ஓ'டொநாஹ்யூ, தனது கேமிராவை எடுத்து அந்த விசித்திரமான காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.

30,000 அடி உயரம் :

இந்த புகைப்படத்தை எடுக்கும் போது அவர் இருந்த விமானம் ஆனது வானத்தில் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயர்ன் ஜெயின்ட் :

இன்டர்நெட்டில் வைரலாகி உள்ள இந்த புகைப்படத்தில் தெரியும் உருவம் ஆனது ஐயர்ன் ஜெயின்ட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் ரோபோட் போன்று காட்சி அளிக்கிறது என்ற கருதும் எழுந்த வண்ணம் உள்ளது.

இன்டர்நெட் வைரலாகியது :

முதலில் ஜோ.இ என்ற வலைதளத்தில் வெளியாகி பின் ரெட்டிட் வலைதளத்தில் என பின், இன்டர்நெட் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகை அடுக்கு :

மேலும் இந்த விசித்திரமான காட்சியானது, வெப்ப மேகங்களில் இருந்து வெளியாகும் புகை அடுக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கற்பனை :

இதுபோன்ற மேக உருவங்கள் ஆனது ஒரு கோணத்தில் இருந்து பார்க்கத்தான் குறிப்பிட்ட கற்பனைக்குள்ளான ஒன்றாக தெரியும் என்ற கருத்தும் மேலோங்கி உள்ளது.

மிதக்கும் நகரம் :

இதே போன்று சமீபத்தில் சீனாவின் வான் பகுதியில் மிதக்கும் நகரம் ஒன்று தோன்றி மறைந்ததும் அது வீடியோவில் பதிவானதும் குறிப்பிடத்தக்கது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படம் : நிக் ஓ'டொநாஹ்யூ

Read more about:
English summary
Mysterious shadowy figure that resembles the Iron Giant robot walking on clouds. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்