நெட்டில் லீக் ஆன - 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மர்ம போன்.!

இணையத்தில் வெளியான மர்ம புகைப்படம், டெக் சந்தையைத் திரும்பி பார்க்க வைக்கும் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.

Written By:

டூயல் கேமரா மற்றும் லெதர் பேக் பேனல் கொண்ட மர்ம ஜியோனி போன் இணையத்தில் கசிந்துள்ளது. இந்தப் போன் சீன TENAA தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் M2017 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பெயரில் இந்தக் கருவி வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. TENAA தளத்தில் இருந்து கசிந்திருக்கும் தகவல்கள் மேலும் பல தகவல்களை வழங்கி இருக்கிறது.

மர்ம போன் குறித்து வெளியாகியிருக்கும் மேலும் பல தகவல்களை விரிவாகப் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிஸ்ப்ளே

ஜியோனி M2017 போனில் 5.7 இன்ச் 2K டிஸ்ப்ளே வழங்கப்படும் என TENAA தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெளியான புகைப்படங்களும் இந்தப் போனில் டூயல்-எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் வித்தியாச வடிவமைப்புக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கிறது.

டூயல் கேமரா

வெளியான தகவல்களில் மர்ம ஜியோனி ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா 12 எம்பி மற்றும் 13 எம்பி கேமரா, 4X ஆப்டிக்கல் சூம் மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவும் கொண்டிருக்குமாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மிகப்பெரிய பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சமாக இதன் பேட்டரி இருக்கும். 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருந்தால் வேறு என்ன சொல்வது. இன்று வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் 3000 - 4000 எம்ஏஎச் பேட்டரி மட்டுமே வழங்கப்படுகிறது.

பிராசஸர்

ஜியோனி M2017 கருவியானது ஆக்டா-கோர் பிராஸர் கொண்டிருக்கும் என்றும் இது ஒருவித மீடியாடெக் சிப்செட் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்டிருக்குமாம்.

வெளியீட்டுத் தேதி

இந்த மர்ம போன் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் இந்தப் போன் நிச்சயம் 2017 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என இதன் பெயரே குறிப்பிடுகிறது. எதுவானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Mysterious Gionee M2017 With 7000mAh Battery Spotted Online
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்