எம்டபுள்யூசி 2017ல் வெளியாகப்போகும் டாப் 5 போன்கள்.!

நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாகப்போகும் டாப் 5 போன்கள்கள் குறித்து ஓர் பார்வை.

By Ilamparidi
|

நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் உலகின் அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வெளியிடுகின்றன.அத்தகைய நிகழ்வில் வெளியாகப்போகும் டாப் 5 போன்கள் குறித்த மேலதிக தகவல்கள் கீழே..

நோக்கியா 8:

நோக்கியா 8:

நாளைய மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது தனது தரமான தயாரிப்புகளால் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்றுள்ள நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா8 ஸ்மாட்போன் ஆகும்.இந்த நோக்கியா 8 ஆனது குவால்காம் பிளாக்ஷிப் ப்ராசஸர் ,ஸ்னாப்ட்ராகன் 835-4/6 ஜிபி ரேம்,குவாட் எச்டி 5.7 இன்ச் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே,ரீசொலூஷன் 2560x1440 பிக்சல்ஸ்,64/124 இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்காட், 24 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி செல்ஃபீ கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும்.

மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோ ஜி5 பிளஸ்:

நாளைய எம்டபுள்யூசி மாநாட்டில் வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான ஆர்வத்தினை உண்டாக்கியவைகளில் மோட்டோ ஜி5 பிளஸ் குறிப்பிடத்தகுந்தது.மோட்டோ ஜி5 பிளஸ் ஆனது 5.2 இன்ச் டிஸ்பிளே,3000 எம்ஏஎச் பாட்டரி,டர்போ பவர் குயிக் சார்ஜிங் சப்போர்ட்,12 எம்பி மெயின் கேமரா, என்எப்சி, ஆண்ட்ராய்டு 7.0 நொவ்கட், குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 625 ப்சஸர்,சர்குலர் கேமரா பேனல் மற்றும் மெட்டல் பாடி வடிவமைப்பு உள்ளிட்ட பல வசதிகளைக்கொண்டு அதிரடியாகக் களமிறங்குகிறது மோட்டோ ஜி5 பிளஸ்.

எல்ஜி சி6:

எல்ஜி சி6:

எல்ஜி சி6 மாடலானது 5.7 குவாட் டிஸ்பிளே,ரீசொலூஷன் 2188x1440,குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 821 ப்ரோசஸர், 3200 எம்ஏஎச் திறனுள்ள பாட்டரி,ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இத்தகைய சிறப்பம்சங்களுடன் நீர் மற்றும் தூசு ரெசிடன்ஸ் அம்சத்தினையும் கொண்டுள்ளது.பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் கைரேகை சென்ஸார் முறையையும் கொண்டுள்ளது.

ஹிவாய் பி10:

ஹிவாய் பி10:

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5.5 இன்ச் டிஸ்பிளே,ஹிவாய் பிளாக்ஷிப் ப்ரசஸர்,ஆக்டா கோர் கின் 960,4/6 ஜிபி ரேம்,ஆண்ட்ராய்டு 7.0 நொவ்கட்,3100 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி,32/64/128 இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 20 எம்பி சென்சாருடன் கூடிய மெயின் கேமரா,12 எம்பி சென்சாருடன் கூடிய 8 எம்பி செல்ஃபீ கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.இதுவும் வாடிக்கையாளர்களிடத்தே அதிகப்படியான ஆர்வத்தினை தூண்டியுள்ளது.

ப்ளாக்பெர்ரி மெர்குரி:

ப்ளாக்பெர்ரி மெர்குரி:

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை பெருமளவில் தூண்டி களமிறங்கப்போகும் மற்றுமோர் ஸ்மார்ட்போன் ப்ளாக்பெர்ரி மெர்குரி ஆகும்.இந்த ஸ்மார்ட்போன் ஆனது மெட்டல் யுனிபாடி,குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 821 சிப்செட்,4 ஜிபி ரேம்,3400 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி,4.5 இன்ச் டிஸ்பிளே, 1620X1080 பிக்சல்ஸ்,64 ஜிபி ஸ்டோரேஜ்,ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், டிடிஇகே செக்குயுரிட்டி அப்ளிகேஷன் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக்கொண்டு களமிறங்குறது ப்ளாக்பெர்ரி மெர்குரி.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நோக்கியா 3310: நான் வந்துட்டென்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.

Best Mobiles in India

English summary
MWC 2017: Top 5 smartphones to look forward to.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X