இனிமே படிப்பது ரொம்ப ரொம்ப 'ஈசி'..!

By Meganathan
|

படிப்பது அவ்வளவு கஷ்டமா இருக்கா என்ன, ஸ்மார்ட்போன் காலத்தில் பல ஆப்ஸ்கள் படிப்பில் இருக்கும் கவனத்தை பாதிக்கும் போது இது போன்ற செயலிகளும் இருக்க தான் செய்கின்றது.கல்வியை எளிமையாக்க இத்தனை செயலிகள் வெளியாகியிருப்பது இந்த காலத்து மாணவர்களுக்கு ஜாலியான விஷயமே..!

என்னது படிப்பதற்கு செயலியானு யோசிப்பவர்களுக்கு ஒர் நற்செய்தி, மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பதை நன்கு அறிந்த சில அதி மேதாவிகள் உருவாக்கிய பயனுள்ள செயலிகளின் பட்டியலை தான் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

சவுன்டுநோட்

சவுன்டுநோட்

ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலி ஆடியோக்களை பதிவு செய்வது, குறிப்புகள் எடுக்கும் போது ஆட்டோஃபில் செய்வது என பள்ளியில் பாடங்களை தவற விடமால் பார்த்து கொள்ளும்.

மேத்வே

மேத்வே

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி பயன்படுத்த இண்டர்நெட் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கணித பாடங்களை எளிய முறையில் கற்பிக்க இந்த செயலி வழி செய்கின்றது.

செல்ஃப்-கன்ட்ரோல்

செல்ஃப்-கன்ட்ரோல்

வாழ்க்கையில் நேரமின்றி அழதிப்படுபவர்களுக்கு இந்த செயலி உபயோகமானதாக இருப்பதோடு நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டவும் செய்யும்.

ஸ்னாப்டூபிடிஎஃப்

ஸ்னாப்டூபிடிஎஃப்

புத்தகங்களில் இருக்கும் வரைப்படங்களை புகைப்படமாக எடுத்து அதனினை பிடிஎஃப் ஃபைலாக மாற்ற இந்த செயலி வழி வகுக்கும்.

டுயோலிங்கோ

டுயோலிங்கோ

பல மொழிகளை கற்க ஆசைப்படுவோர் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இந்த செயலி இலவசமாக கிடைக்கின்றது.

டிராகன் டிக்டேஷன்

டிராகன் டிக்டேஷன்

நீங்கள் வார்த்தைகளை கூறினால் போதும் அவற்றை எழுத்துக்களாக மாற்றும் வேலையை இந்த செயலி பார்த்து கொள்ளும்.

டிக்ஷனரி.காம்

டிக்ஷனரி.காம்

பெயருக்கு ஏற்றார் போல் இன்த செயலி உங்களுக்கு தெரியாத வார்த்தைகளுக்கான அர்த்தத்தை வழங்கும்.

எனி.டூ

எனி.டூ

இந்த செயலி நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நினைவூட்டும்.

அலாமி

அலாமி

இந்த அலாரம் கடிகார செயலி கும்பகர்ணன் போல் உறங்குபவர்களையும் எழுப்பி விடும்.

ரியல்கால்க்

ரியல்கால்க்

அனைத்து மொபைல்களிலும் கால்குலேட்டர்கள் வழங்கப்பட்டிருக்கும், ஆனால் இந்த செயலி சாதாரண கால்குலேட்டர்களை விட அதிக திரன் கொண்டதாகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some must have apps to ease your struggle with studying. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X