மோட்டோ எக்ஸ் (2015) : செப்டம்பர் வெளியீடு..!?

By Meganathan
|

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி (2015) கருவியை இம்மாத துவக்கத்தில் வெளியிட்டதோடு மோட்டோ எக்ஸ் ஸ்டைல் மற்றும் மோட்டோ எக்ஸ் ப்ளே என இரு மாடல்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இந்நிறுவனம் இரு குருவிகளையும் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு, தப்பிக்குமா சாம்சங்..??

மோட்டோ எக்ஸ் (2015) : செப்டம்பர் வெளியீடு..!?

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாளர் அமித் போனி புதிய கருவிகளின் வெளியாகும் என்பதை மட்டும் உறுதி செய்திருக்கும் நிலையில் இரு கருவிகளும் வெளியாகுமா என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

யூட்யூப் மாயாஜாலகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மோட்டோ எக்ஸ் ஸ்டைல் கருவியானது ஸ்னாப்டிராகன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்ஸா கோர் 808 எஸ்ஓசி மற்றும் 3ஜிபி ரம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 5.7 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே, 21 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16, 32, மற்ரும் 64 ஜிபி வகையில் ரூ.26,048 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ எக்ஸ் (2015) : செப்டம்பர் வெளியீடு..!?

மோட்டோ எக்ஸ் ப்ளே கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 3630 எம்ஏஎச் பேட்டரி, 1.7 இன்ச் ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் 615 எஸ்ஓசி மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என்றும் 21 எம்பி ப்ரைமரி கேமரா 5 எம்பி முன்பக்க கேமராவோடு 16, 32 ஜிபி மெமரிக்களில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ.19,520 என்றும் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola planning to launch Moto X (3rd gen) in India. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X