உலக சாம்பியன்களுக்கு சவால்..!!

By Meganathan
|

1948 ஆம் ஆண்டு துவங்கிய ரோபோட்களின் வரலாற்றில் இன்று வரை பல வித தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட ரோபோட்கள் மனித வாழ்க்கையை எளிமையாக்கி வருகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானாக இயங்கும் ரோபோட்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தாண்டின் துவக்கம் முதலே உலக சந்தையில் பல்வேறு புதிய வகை ரோபோட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் உலகளாவிய ரோபோட்டிக்ஸ் வல்லுநர்கள் வரும் ஆண்டுகளில் ரோபோட்டிக்ஸ் சந்தையின் மதிப்பு வரவாறு காணாத அளவு உயரும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

சவால்

சவால்

நிலைமை இப்படி இருக்க உலக சாம்பியன்களுக்கு சவால் விடும் வகையில் புதிய வகை ரோபோட் ஒன்றை பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கின்றது.

யமஹா

யமஹா

உலகளவில் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான யமஹா மனித உருக்கொண்ட ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

மோட்டோபாட்

மோட்டோபாட்

இரு சக்கர வாகனங்களை இயக்கும் இந்த ரோபோட் மோட்டோபாட் என அழைக்கப்படுகின்றது.

இயக்கம்

இயக்கம்

மோட்டார் பந்தியங்களில் பயன்படுத்துவதை போன்ற இரு சக்கர வாகனத்தை மோட்டோபாட் வேகமாக இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரல்

குரல்

ஹைப்நாட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோட்டோபாட் பேச முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்ட்ரோல்

கண்ட்ரோல்

தலைசிறந்த மோட்டார் சைக்கிள் வீரர்களே யோசிக்கும், மிகவும் அசாத்திய கண்ட்ரோல்களையும் மோட்டோபாட் மிகவும் திறமையாக எதிர்கொள்ளும்.

சவால்

சவால்

இந்த திறமைகள் உலக சாம்பியனுடன் மோட்டோபாட் போட்டியிட பயனுள்ளதாக இருக்கும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேம்பாடு

மேம்பாடு

மனிதர்களுக்கு இணையாக சவால் விடும் தகுதி இருந்தாலும் மோட்டோபாட் தரப்பில் இன்னும் சில மேம்பாட்டு பணிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமநிலை

சமநிலை

தற்சமயம் வரை சமநிலையுடன் இயங்க வாகனத்தின் இரு புறமும் கூடுதல் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளைவு

வளைவு

விரைவில் வளைவுகளையும் எளிமையாக மேற்கொள்ளும் வகையில் மோட்டோபாட் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ட்ரோல்

கண்ட்ரோல்

அதிகம் மேம்படுத்தப்பட்டால் துணை சக்கரங்கள் இல்லாத இரு சக்கர வாகனத்தையும் மோட்டோபாட் மிகவும் சாதாரணமாக இயக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேகம்

வேகம்

எதிர்காலத்தில் மோட்டோபாட் எவ்வித உதவியும் இன்றி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என யமஹா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தாணியங்கி வாகனம்

தாணியங்கி வாகனம்

எதிர்காலத்தில் இந்த திட்டம் வெற்றியடையும் போது மோட்டோபாட்கள் மனிதர்களின் இருசக்கர வாகன ஓட்டிகளாகவும் பயன்படுத்தலாம்.

வீடியோ

மோட்டோபாட் ரோபோட் இரு சக்கர வாகனத்தை இயக்கும் வீடியோவினை பாருங்கள்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Motorcycle Riding Robot Is Capable Of Challenging World Champion. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X