இணையத்தில் கசிந்த புதிய ஸ்மார்ட்போன், முழு தகவல்கள்.!

Written By:

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய கருவியான மோட்டோ எம் 'Moto M' குறித்த தகவல்கள் சில வாரங்களுக்கு முன் இணையத்தில் வெளியானது. உடனே மோட்டோரோலா விரைவில் 5.5 இன்ச் திரை மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு இணையங்களில் வெளியானது. தற்சமயம் இதே கருவி சார்ந்த மேலும் பல தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அம்சங்கள்

புதிய கருவி சார்ந்த புகைப்படங்கள் டெக்டிராய்டர் தளத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. அதன் படி கசிந்திருக்கும் புகைப்படங்களில் இந்தக் கருவி குறித்த சில அம்சங்கள் தெரியவந்திருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மெட்டல்

மோட்டோ எம் கருவி முழுமையாக மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும், இது அந்நிறுவனத்தின் முதல் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட கருவியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இயங்குதளம்

ரகசியமாகக் கசிந்திருக்கும் புகைப்படங்களின் படி மோட்டோ எம் கருவியில் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், ஃபுல் எச்டி 1080*1920 பிக்சல் கொண்ட திரை கொண்டிருக்கும் எனத் தெரியவந்திருக்கின்றது. இதோடு இந்தக் கருவியினை லெனோவோ நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது.

வெளியீடு

மேலும் மோட்டோ எம் கருவியானது ஆசியாவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்தக் கருவியில் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 16 எம்பி பிரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காட்சி

இம்முறை வெளியான புகைப்படங்கள், ஏற்கனவே வெளியானதைப் போன்றே காட்சியளிக்கின்றது. கடந்த முறை வெளியான புகைப்படங்களில் XT1663 என்ற மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருந்தது.

தகவல்

பென்ச்மார்க் தகவல்களின் படி இந்தக் கருவியில் 4.6 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 SoC, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Moto M Leaked in Fresh Renders, reveals more details Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்