மோட்டோ ஜி5 பிளஸ் : முழு விவரங்களும் ஆன்லைனில் லீக் ஆனது.!

இந்த லீக்ஸ் தகவலில், மோட்டோ ஜி5 பிளஸ் கருவியின் பல புகைப்படங்கள், அதன் அனைத்து அம்சங்கள், வெளியீட்டு தேதி கூட வெளியாகியுள்ளது.

|

மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவி சார்ந்த புகைப்படங்கள் மற்றும் அக்கருவியின் முழு சிறப்பம்சங்கள் பற்றிய புதிய லீக்ஸ் தகவல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. முதலில் வெளியான பல லீக்ஸ் தகவல்களின்கீழ் இக்கருவி மோட்டோ சி கருவி போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளதாக அறியப்பட்டது ஆனால் இப்போது, இக்கருவி மோட்டோ ஜி4 ப்ளஸ் கருவியின் ஒரு வாரிசாக இருக்கலாம் என்பது போல சமீபத்திய லீக்ஸ் தகவல்கள் பரிந்துரைக்கின்றன.

இந்த லீக்ஸ் தகவலில் கருவியின் பல புகைப்படங்கள் அதன் அனைத்து அம்சங்கள் அவ்வளவு ஏன், அதன் வெளியீட்டு தேதி கூட வெளியாகியுள்ளது.

ஒரு கலவை

ஒரு கலவை

லீக் தகவலில் இருந்து இக்கருவியி வெள்ளி கலப்பு நிறத்தில், ஜி4 கருவி போன்ற முன் மோட்டோ டிம்பிள் மற்றும் ஒரு பாடி பட்டதன் கொண்ட, மற்றும் மோட்டோ இசெட் போன்றே ஒரு பெரிய பின்புற பெரிய கேமரா ஆகிய வடிவமைப்பின் ஒரு கலவையாக உள்ளது.

ரேம், டிஸ்ப்ளே

ரேம், டிஸ்ப்ளே

உடன் இக்கருவி ஒரு 2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 625 அக்டாகோர் சிப்செட் மூலம் இயங்கும், 32 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பும் மற்றும் 4ஜிபி வரை ரேம், 3080 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, 5.5-அங்குல முழு எச்டி (1080) டிஸ்ப்ளே மற்றும் சாத்தியமான ஒரு கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்று லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கிறது.

கேமரா, சென்சார்

கேமரா, சென்சார்

டிஸ்ப்ளேவை வைத்து பார்க்கும் போது மோட்டோ ஜி5 பிளஸ் கருவியில் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லீக்ஸ் தகவலோ இக்கருவி 13-மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று பட்டியலிட்டுள்ளது. உடன் நிக்கருவியில் என்எப்சி (NFC) அக்சலரோமீட்டர் , 3-ஆக்சிஸ் கிரையோஸ்கோப் மற்றும் கிராவிட்டு சென்சார்கள் இருக்கும் என்றும் லீக்ஸ் வெளிப்படுத்துகிறது.

எம்டபுள்யூசி 2017

எம்டபுள்யூசி 2017

ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0 ஓஎஸ் ப்ரீ-லோட் உடன் வெளியாகும் என்று எதிர்பார்கப்படும் இக்கருவி பிப்ரவரியில் நடக்கும் எம்டபுள்யூசி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை

விலை

மோட்டோ ஜி5 ப்ளஸ் அக்கருவி சுமார் ரூ.26,500/- என்ற விலை நிர்ணயத்தை பெறலாம் என்றும் லீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது மறுபக்கம் இக்கருவியின் அம்சங்கள் அடிப்படையில் பார்க்கும் போது மோட்டோ ஜி4 ப்ளஸ் போன்றே இருப்பதால் இக்கருவியின் நியாமான விலை ரூ.15,000/- வரம்பில் இருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : ஆண்ட்ராய்டு நோக்கியா 6, என்ன விலை, என்னென்ன சிறப்பம்சங்கள்?

Best Mobiles in India

English summary
Moto G5 Plus images and full specs leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X