"பந்தா" காட்டும் டிசைனில் மோட்டோ 5, மோட்டோ 5 ப்ளஸ்.!

மோட்டோ 5, மோட்டோ 5 ப்ளஸ் கருவிகள் மீது எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அக்கருவிகளின் கேஸ் ரெண்டர்கள் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

Written By:

லெனோவா நிறுவனத்தின் புதிய மோட்டோ 5 மற்றும் மோட்டோ 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தொடர்பான கசிவுகள் ஏற்கனவே வெளியாகி அக்கருவிகள் எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இப்போது புதிய மோட்டோ 5 மற்றும் மோட்டோ 5 ப்ளஸ் கருவியின் கேஸ் ரெண்டர்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் பரபரப்பாக சுற்றி வரும் இந்த கேஸ் ரெண்டர்கள் பற்றிய விவரங்கள் உடன் மோட்டோ 5 மற்றும் மோட்டோ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வட்ட கேமரா பேனல்

மோட்டோ 5 மற்றும் மோட்டோ 5 பிளஸ் ஆகிய இரன்டு கைபேசிகலின் ஹோம் பொத்தானில் பதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மீண்டும் வட்ட கேமரா பேனல் (சர்குலர் கேமரா பேனல்) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

"எம்" லோகோ

அதுமட்டுமினிற் மிகவும் பிரபலமான சின்னமான மோட்டோ நிறுவனத்தின் "எம்" லோகோ மீண்டும் மோட்டோ 5 மற்றும் 5 பிளஸ் கேமரா பேனல்களின் கீழே பதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதி

மோட்டோ 5 மற்றும் 5 பிளஸ் வடிவமைப்பை உறுதி செய்யும் இந்த புதிய கேஸ்கள் இப்போது தங்க நிற மாறுபாட்டில் கசிந்துள்ளது முன்னர் வெள்ளி நிற பதிப்பில் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வின்பியூச்சர்.டி மற்றும் டெக்ட்ரொய்டர் இந்த லீக்ஸ் படங்களை வெளியிட்டுள்ளது.

டிஸ்ப்ளே

மற்றும் பூர்வாங்க கசிவுகளின் அடிப்படையில், மோட்டோ 5 பிளஸ் கருவியில் 403பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே இடம்பெறும் மற்றும் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உடன் 4ஜிபி மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு எதிர்பார்க்கப்படுக்கிறது.

ஆண்ட்ராய்டு, கேமரா

பென்ஞ்மார்க் குறிப்புகளின் படி மோட்டோ 5 பிளஸ் கருவி பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்கொண்டும் இயங்கும். கேமரா துறையை பொறுத்தமட்டில் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மோட்டோ 5

மறுபுறம் மோட்டோ 5 கருவியானது மோட்டோ 5 பிளஸ் உடன் ஒப்பிடுகையில் ஒரு சில தரமிறக்குதல்கள்களுடன் கிட்டத்தட்ட இதே போன்ற அம்சங்கள் கொண்டு வெளிவர வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க

சாம்சங் கேலக்ஸி எஸ்8 : வடிவமைப்பு, அம்சங்கள், வெளியீட்டு தேதி.!?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Moto G5, Moto G5 Plus Case Renders Leaked; Show Off Design. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்