தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல்

Posted by:

அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்து கொள்ள இன்றைய தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. பல நாடுகளும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல சாதனைகளை புரிந்து வருகின்றன.

அந்த வகையில் தொழில்நுட்ப துறையில் சிறந்த விளங்கும் உலக நாடுகளின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஜப்பான்

அறிவியில் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஜப்பான் சிறந்து விளங்குகின்றது. இதோடு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆட்டோமொபைல், மின்சாதனங்கள், இயந்திரம் போன்று பல்துறை பொறியியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றதோடு பல புதிய கண்டுபிடிப்புகளையும் வழங்கி இருக்கின்றது.

அமெரிக்கா

வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா புகழ் பெற்று விளங்குவது அனைவரும் அறிந்ததே. மேலும் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், இன்டெல், ஐபிஎம் போன்ற உலக புகழ் பெற்ற நிறுவனங்களின் பிறப்பிடமாகவும் அமெரிக்கா விளங்குகின்றது.

தென் கொரியா

எல்ஜி, ஹூன்டாய் மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிறப்பிடமாக தென்கொரியா விளங்குகின்றது. இந்நிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் டோயோட்டா போன்ற நிறுவங்களுடன் போட்டி போடும் அளவு பிரபலமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டின் 35 சதவீத ஏற்றுமதி தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கின்றது. மேலும் வான்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் 5 நாடுகளில் இஸ்ரேல் இடம்பெற்றிருக்கின்றது.

ஜெர்மனி

பல ஆண்டுகளாக ஜெர்மனி தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்குகின்றது. வான்வெளி ஆய்வு பணிகளில் தனக்கென தனி இடம் பெற்றிருக்கும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும்.

ரஷ்யா

மனிதன் தயாரித்த முதல் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றிருக்கின்றது. இதோடு ர்ஷ்யாவில் இருந்து பல நாடுகளுக்கும் தொழில்நுட்ப பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஃபின்லாந்து

விலை உயர்ந்த தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு பெயர் போன நாடு தான் ஃபின்லாந்து. உலக புகழ் பெற்ற நோக்கியா நிறுவனத்தின் பிறப்பிடம் ஃபின்லாந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டன்

தொழில்நுட்ப மயமான உலகின் முதல் நாடு என்ற பெருமையை லண்டன் பெற்றுள்ளது. ஜெட் என்ஜின், லோகோமோட்டிவ் என்ஜின், வேர்ல்டு வைடு வெப் போன்று பல தொழில்நுட்பங்களை பிறப்பிடமாக கொண்டிருக்கின்றது.

கனடா

அதிக முன்னேற்றம் அடைந்த தொழில்நுட்ப துறைக்கு கனடா பெயர் போனது. கனடா அரசாங்கம் தொழில்நுட்ப ஆய்வு பணிகளுக்கு வரவேற்பு அளிப்பதோடு பல் துறை கண்டுபிடிப்புகளுக்கும் நிதி வழங்கி வருகின்றது.

சிங்கப்பூர்

உயர் ரக தொழில்நுட்பம், வியாபாரம் செய்ய ஏற்ற நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. மேலும் உலகின் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம் பெற்றிருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Check out here the list of Most Technologically Advanced Countries. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்