புகைப்படங்களில் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்புகள்

By Meganathan
|

தொழில்நுட்ப உலகில் தினமும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகின்றன, என்றாலும் அவை அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை என்று தான் கூற வேண்டும். இங்கு தொழிலநுட்ப உலகை உலுக்கிய சில முக்கியமான கண்டுபிடிப்புகளை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

ஆப்பிள் ஐபாட்

ஆப்பிள் ஐபாட்

2001 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபாட்களை வெளியிடும் முன்பே போர்டபிள் எம்பி3 ப்ளேயர்கள் இருந்தன ஆனால் ஆப்பிள் ஐபாட் மக்கள் அது வரை கண்டிறாத அளவு ஸ்டோரேஜ் வசதிகளை அளித்ததோடு, சிடி மற்றும் கேசட்களை எடுத்தும் செல்ல வேண்டிய அவசியத்தை போக்கியது.

மொசில்லா ஃபயர்பாக்ஸ்

மொசில்லா ஃபயர்பாக்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்ட்ர்நெட் எக்ஸ்ப்ளோரரை எதிர்த்து துவங்கப்பட்ட முதல் வெப் ப்ரவுஸர் ஆகும். 2002 ஆம் ஆண்டில் இது துவங்கப்பட்டது.

ஸ்கைப்

ஸ்கைப்

மக்கள் வெளிநாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்தது ஸ்கைப். 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த சேவை முதலில் கணினிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது, பின்னர் அவை மொபைல்களுக்கும் வழங்கப்பட்டது.

பேஸ்புக்

பேஸ்புக்

இது உலகின் முதல் சமூக வலைதளமாக இல்லை என்றாலும், இன்று உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருக்கின்றது. இந்த தளம் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோரை உலகம் முழுவதும் இணைக்கின்றது.

யூட்யூப்

யூட்யூப்

பேபால் நிறுவனத்தின் மூன்று ஊழியர்களால் 2005 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது தான் யூட்யூப். இன்று இது உலக பிரபலமாக இருப்பதோடு அனைத்து உலக நிகழ்வுகளையும் வீடியோ வடிவில் வழங்குகின்றது.

Nintendo Wii

Nintendo Wii

சோனியின் ப்ளே ஸ்டேஷந் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் ஆகியவை 2000 ஆண்டுகளில் பலத்த போட்டியை சந்தித்தன, ஆனால் நின்டென்டோ வை கன்ட்ரோலர் விர்ச்சுவல் கேம்களை விளையாட அனுமதித்தது.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன்

சந்தையில் மிக பெரிய வரவேற்பை பெற்ற முதல் டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் ஐபோன் தான். இந்த கருவி வெளியான சமயத்தில் அனைவரையும் கவர்ந்தது.

பிபிசி ஐப்ளேயர்

பிபிசி ஐப்ளேயர்

பிபிசி நிறுவனத்தின் இன்டர்நெட் தொலைகாட்சி சேவை கண்டறியப்பட்ட தாலம் சரியாக இருந்தது. மக்கள் இன்டர்நெட் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்க துவங்கி இருந்ததால், பிபிசியின் ஐப்ளேயர் நல்ல வரவேற்பை பெற்றது எனலாம்.

அமேசான் கின்டிள்

அமேசான் கின்டிள்

சோனி நிறுவனத்தை எதிர்த்து அமேசான் வெளியிட்ட இந்த ஈ ரீடர் விலை குறைவாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று விற்பனையிலும் சாதித்தது.

கூகுள் ஆன்டிராய்டு

கூகுள் ஆன்டிராய்டு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் தளத்திற்கு எதிராக தகுந்த ஓஎஸ் ஒன்றை அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வந்தது தான் கேமராக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆன்டிராய்டு, இன்று அனைத்து பிரபல மொபைல் நிறுவனங்களும் ஆன்டிராய்டு கொண்டு தான் இயங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Most important inventions of the 21st Century. Here you will find the Most important inventions of the 21st Century. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X