மொபைல் தயாரிப்பு : புதிய சாதனை படைத்த இந்தியா.!!

Written By:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்களின் எண்ணிக்கையில் கனிசமான உயர்வு எட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் மொபைல் கட்டமைப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாதனை

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை சுமார் 100 மில்லியன் எனும் புதிய எல்லையை கடந்திருக்கின்றது. மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனம்

பெரும்பாலான முன்னணி மொபைல் போன் நிறுவனங்களும் தங்களது மொபைல் தயாரிப்பு ஆலைகளை இந்தியாவில் கட்டமைத்திருப்பதே இந்த உயர்விற்கு காரணம் என கூறப்படுகின்றது.

உறுதி

இத்தகவலை மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் உறுதி செய்திருக்கின்றார்.

முதலீடு

இந்தியாவில் மின்சாதன தயாரிப்புகளின் மூலம் ரூ.1.14 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு புதிதாக 15 மொபைல் தயாரிப்பு ஆலைகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்தியர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2014

முன்னதாக 2014 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சம் 68 மில்லியன் மொபைல் போன் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன, ஆனால் இன்று 100 மில்லியன் எனும் புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

2015

100 மில்லியன் எனும் புதிய சாதனை 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே எட்டப்பட்டு விட்டதாகவும் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்திருக்கின்றார்.

வளர்ச்சி

இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் தரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 95 சதவீத வளர்ச்சியடைந்திருக்கின்றது என இந்திய செல்லுரார் அசோசியேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான பங்கஜ் மொஹிந்ரோ தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

மேலும் மத்திய அரசின் முயற்சியால் இந்திவில் முதலீடு அதிகரித்திருப்பதோடு இதன் மூலம் சுமார் 30,000 புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியிருப்பதாக மொஹிந்ரோ தெரிவித்துள்ளார்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Mobile phone manufacturing base reaches 100 million units in India Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்