Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மொபைல்போன் மூலம் அரசு சேவைகள்: ஒபாமா உத்தரவு

Updated: Tuesday, March 26, 2013, 9:30 [IST]

mobile app for administrative services obamas order

அமெரிக்காவில் 12 மாதத்திற்குள் அரசாங்க சேவைகள் அனைத்தும் மொபைல்போன்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசு துறைகளுக்கு அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அரச சேவைகளை பெற வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்கு பணமும், நேரமும் அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த கால தாமதம் இங்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளிலும் இருக்கிறது.

மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் அரசு சேவைகளை வழங்கும் இந்த வசதியினால், கால விரயத்தினை எளிதாக தவிர்க்கலாம்.இதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது.

ஆனால் இனி அரசாங்க சேவைகளை எளிதில் மொபைல்கள் மூலம் வழங்க புதிய அப்ளிக்கேஷன்களை உருவாக்க, அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அப்ளிக்கேஷன் சேவையை எந்த இயங்குதளம் கொண்ட மொபைலாக இருப்பினும் அதில் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

இதனால் எல்லா மொபைல்களில் இருந்தும் அரசாங்க சம்மந்தமான சேவைகளை காலதாமதமின்றி பெறலாம். அரசாங்க சேவையை பொது மக்கள் எந்த நேரத்திலும் பெற்று பயனடைய இந்த மொபைல் அப்ளிக்கேஷன் சிறப்பாக துணை புரியும்.

இந்த அப்ளிக்கேஷனை 12 மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று கீழ்தட்டு மக்களில் இருந்து அனைவரும் பயன்படுத்தும் முக்கிய எலக்ட்ரானிக் சாதனமாக இருக்கிறது மொபைல்.

அதனால் இதன் மூலம் எந்த ஒரு தகவலையும் எளிதாக வழங்கவோ, பெறவோ முடியும். இதை கருத்தில் கொண்டு தான் அமெரிக்க அரசு இப்படி ஒரு சிறப்பான திட்டத்தினை செயல்படுத்த இருக்கிறது.

Story first published:  Friday, May 25, 2012, 15:36 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll