மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 640 மற்றும் 640 எக்ஸ்எல் மாடல்களை வெளியிட்டது

By Meganathan
|

மைக்ரோசாப்ட் நிருவனம் லூமியா 640 ஸ்மார்ட்போனை 4ஜி சேவை வழங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் படி வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 640 மற்றும் 640 எக்ஸ்எல் மாடல்களை வெளியிட

சிங்கிள் மற்றும் டூயல் சிம் வகைகளில் கிடைக்கும் லூமியா 640, 5 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ராமும் கொண்டுள்ளது. தற்சமயம் விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் விண்டோஸ் 10 அப்டேட் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை லூமியா 640, 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 1 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. 2500 எம்ஏஎஹ் பேட்டரி இருப்பதோடு 8 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 640 மற்றும் 640 எக்ஸ்எல் மாடல்களை வெளியிட

லூமியா 640 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனை பொருத்த வரை 5.7 இன்ச் ஹெச்டி ஸ்கிரீன், 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள் லூமியா 640 ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்று தான் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Microsoft unveils Lumia 640, 640 XL smartphones. Microsoft today unveiled the Lumia 640, 640 XL smartphones that will be compatible with 4G networks.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X