ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 640, 640XL

Posted by:

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 640, 640XL ஸ்மார்ட்போன்களை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட தயாராகிவிட்டது. அதன் படி ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

லூமியா 640 ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இதோடு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 640, 640XL

லூமியா 640XL 5.7 இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் லூமியா 630யில் இருப்பது போன்ற ராம் மற்றும் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

இரு கருவிகளும் விண்டோஸ் போன் 8.1 மற்றும் லூமியா டெனிம் அப்டேட் கொண்டிருக்கின்றது. 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிரைவ் ஸ்பேஸ் 30 ஜிபியும் வழங்கப்படுகின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Microsoft expected to launch Lumia 640, 640 XL smartphones in India on 7 April
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்