சீனாவை பின்தள்ளிய இந்திய நிறுவனம்..!!

By Meganathan
|

இந்த ஆண்டின் துவக்கம் முதலே ஸ்மார்ட்போன் சந்தையானது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது எனலாம். பல முன்னணி நிறுவனங்களின் கருவிகளும் எதிர்பார்த்த படி விற்பனையாகாததும், பல புதிய நிறுவனங்களின் வருகை மற்றும் அந்நிறுவனங்களின் விற்பனையை இதற்கு முக்கிய காரணமாக கூற வேண்டும்.

நிலைமை இப்படி இருக்க உலக சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனத்தை விற்பனையில் பின்னுக்கு தள்ளியிருக்கின்றது இந்திய நிறுவனம்.

ஆய்வு :

ஆய்வு :

கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் மார்கெட் மானிட்டர் சர்வீஸ் எனும் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது.

முன்னிலை :

முன்னிலை :

இந்த ஆய்வு அறிக்கையில் இந்தியா முழுவதிலும் சாம்சங் நிறுவனம் முன்னிலை வகிக்கின்றது.

விற்பனை :

விற்பனை :

மேலும் இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு ஸ்மார்ட்போன் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் :

முடிவுகள் :

இந்த ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரையிலான தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனம் :

இந்திய நிறுவனம் :

ஆன்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் சார்ந்த யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியிருக்கின்றது.

நிறுவனம் :

நிறுவனம் :

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.

எல்டிஈ :

எல்டிஈ :

மேலும் இந்தியாவில் விற்பனையாகும் மூன்றில் ஒரு கருவி எல்டிஈ கருவி என்றும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடம் :

முதலிடம் :

மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையை பொருத்த வரை இந்தியாவில் சாம்சங் நிறுவனம் முறையே 19 மற்றும் 23.2 சதவீதம் சந்தை பங்குகளுடன் முதலிடம் பிடித்திருக்கின்றது.

மைக்ரோமேக்ஸ் :

மைக்ரோமேக்ஸ் :

இந்தியாவில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் சந்தையில் 13.7 மற்றும் 17.7 சதவீத பங்குகளுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றது.

முகநூல் :

முகநூல் :

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்..!

Best Mobiles in India

English summary
Micromax's Yu Sold More Smartphones Online Than Xiaomi. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X