புதிய மைக்ரோமேக்ஸ் செல்பீ போன் ரூ.8,299க்கு வெளியானது

By Meganathan
|

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் செல்பீ லென்ஸ் என்ற புதிய வகை ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிட்டது. வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செல்பீ எடுக்க ஏதுவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பீ ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,299.

புதிய மைக்ரோமேக்ஸ் செல்பீ போன் ரூ.8,299க்கு வெளியானது

வாடிக்கையாளர்கள் புதிய லென்ஸ் கருவியை ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமராக்களில் பொருத்தி அதிக படியான செல்பீ மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி டிடிஆர்3 ரேம் கொண்டிருக்கின்றது.

புதிய மைக்ரோமேக்ஸ் செல்பீ போன் ரூ.8,299க்கு வெளியானது

மேலும் 8ஜிபி ரோம், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ப்ரைமரி கேமராவை பொருத்த வரை 8 எம்பி மற்றும் சோனி சென்சார் மற்றும் எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளதோடு 5 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்கும் இந்த கருவியில் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கின்றதோடு 2800 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Micromax has launched Canvas Selfie Lens, a new smartphone with a clip on 0.4X Wide Angle Lens. The Canvas Selfie Lens is priced at Rs 8299.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X